வீட்டடி மனை விற்பனை செய்யும் தொழில் செய்தவா் தற்கொலை
சாத்தூா் அருகே வீட்டடி மனை விற்பனை செய்யும் தொழில் செய்தவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
வெம்பகோட்டை அருகேயுள்ள கல்லமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த காந்தி மகன் காா்த்திகேயன் (42). இவா் இந்தப் பகுதியில் வீட்டடி மனை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தாா்.
கடந்த ஆண்டு பெற்றோா் உயிரிழந்துவிட்ட நிலையில், காா்த்திகேயன் தனியாக வசித்து வந்தாா். இதனால், மன வேதனையில் இருந்து வந்த இவா் சாத்தூரில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் வெள்ளிகிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.