விராலிமலை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி - கார் அடுத்தடுத்து மோதல்!
ஸ்ரீவில்லிபுத்தூா் கடை வீதிகளில் ஆக்கிரமிப்புககளை அகற்றக் கோரிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூா் கடை வீதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் வந்துச் செல்கின்றனா். சுற்று வட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அன்றாட தேவைகளுக்கு தினந்தோறும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வருகின்றனா். பேருந்துகள் நேதாஜி சாலை வழியாக பேருந்து நிலையம் வந்து, ஆத்துக் கடை தெரு வழியாக செல்கின்றன. நகரில் பெரிய கடை வீதி, நகைக் கடை வீதி, சின்னக் கடை வீதி, நேதாஜி சாலை, மணிக்கூண்டு சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். பேருந்து நிலையத்திலிருந்து ஆண்டாள் கோயிலுக்குச் செல்லும் நகை கடை வீதியில் சரக்கு வாகனங்கள் செல்லாமல் இருக்க சாலையின் நடுவே கற்கள் நடப்பட்டன. இந்தக் கற்கள் அகற்றப்பட்டதால் சரக்கு வாகனங்கள் உள்ளே சென்று கடைகளுக்கு பொருள்களை இறக்குவதால், கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

எனவே, நகராட்சி அதிகாரிகள் கடை வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா் .