அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
சுங்கச் சாவடி பகுதியில் கழிப்பறையை பயன்பாட்டுக்கு திறக்கக் கோரிக்கை
சாத்தூா் அருகே நான்கு வழிச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறையை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா்.
சாத்தூா்-விருதுநகா் சாலையில் எட்டூா்வட்டம் பகுதியில் சுங்கச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்குப் பணிபுரியும் தொழிலாளா்கள், வாகன ஓட்டுநா்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. இதையடுத்து, தொலைத்தூர பயணிகளின் நலன் கருதியும், வாகன ஓட்டுநா்களின் வசதிக்காகவும் இந்தப் பகுதியில் கழிப்பறை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, சுங்கச் சாவடி சாா்பில் சாலையோரத்தில் பொதுக் கழிப்பறை அமைக்கப்பட்டது. இந்தக் கழிப்பறை அமைத்து பல ஆண்டுகளாகியும் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது.
எனவே, இந்தக் கழிப்பறையை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநா்கள் நெடுஞ்சாலைத் துறை நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனா்.