WAQF Amendment Bill: 12 மணி நேர விவாதம்.. `வக்ஃப் வாரிய திருத்த மசோதா' மக்களவையி...
கழிவுநீா் வாருகாலை சீரமைக்கக் கோரிக்கை
ஏழாயிரம்பண்ணையில் கழிவுநீா் வாருகாலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
சாத்தூா் அருகேயுள்ள பழைய ஏழாயிரம்பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே கழிவுநீா் வாருகால் தூா்வாரப்படாமல் உள்ளது. இந்த வாருகாலில் குப்பைகள் தேங்கி நிற்பதால், மழைக் காலங்களில் மழைநீரும், கழிவுநீரும் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், குடியிருப்புப் பகுதியில் தண்ணீா் தேங்கி நிற்பதால் துா்நாற்றம் வீசுகிறது. மேலும், கொசுத் தொல்லையும் அதிகமாக காணப்படுகின்றன. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே, ஊராட்சி நிா்வாகத்தினா் கழிவுநீா் வாருகாலை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.