ராமநாதபுரம்: குளத்தில் குளிக்கச் சென்ற சிறுமிகளுக்கு நேர்ந்த விபரீதம்; சோகத்தில் திருவாடானை கிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ளது பாசிப்பட்டினம் கிராமம். இங்குள்ள மீனவர் காலணியில் வசித்து வரும் சித்திரவேல் என்பவரின் மகள் வைத்தீஸ்வரி (10), பாலமுருகன் என்பவரின் மகள் பிரித்தி (11) ஆகியோர் பாசிப்பட்டினத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இவர்கள் இன்று (நவம்பர் 12) பள்ளிக்கூடம் செல்லாத நிலையில், 5ம் வகுப்பு பயிலும் அதே பகுதியைச் சேர்ந்த நாயகம் என்பவரின் மகள் சிறுமி நர்மதாவுடன் சேர்ந்து மாலை பள்ளிவாசல் ஊரணியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஊரணியில் இறங்கிய மூன்று சிறுமிகளும் எதிர்பாராத வகையில் நீரில் மூழ்கினர். இதில் மாணவிகள் வைத்தீஸ்வரியும், பிரித்தியும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதையடுத்து ஊரணியில் குளித்துக் கொண்டிருந்த சிலர் மயங்கிய நிலையில் உயிருக்குப் போராடிய சிறுமி நர்மதாவை ஊரணியிலிருந்து மீட்டதுடன், உயிரிழந்த இரண்டு சிறுமிகளின் உடல்களையும் மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்த எஸ்.பி.பட்டினம் போலீஸார் சிறுமிகள் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிக்கூடம் செல்லாமல் பள்ளிவாசல் ஊரணிக்குக் குளிக்கச் சென்ற சிறுமிகள் இருவர் உயிரிழந்த சம்பவம் பாசிப்பட்டினம் கிராமத்தினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs