14 Years of Ponnar Shankar: 80,000 நடிகர்கள்; படத்துக்கு கருணாநிதி சொன்ன விஷயம் ...
ராம் சரண் நடிக்கும் பெத்தி - க்ளிம்ஸ் விடியோ வெளியீடு!
ராம் சரண் நடிக்கும் பெத்தி படத்தின் முதல் பார்வை க்ளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.
தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படம் பெத்தி.
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஜான்வி கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படம் அதிக பொருட்செலவில் தயாராகி வருகிறது. பெத்தி படத்தை சுகுமார் ரைட்டிங்ஸ், வ்ரிதி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
பெட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன் வெளியான நிலையில் இன்று இந்தப் படத்தின் முதல் பார்வை க்ளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.
இந்தப் படம் அடுத்தாண்டு மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.