செய்திகள் :

ரூ.10.60 லட்சம் மோசடி: முதிய தம்பதி ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி

post image

வேலூா்: நிலம் விற்ற பணம் ரூ.10.60 லட்சம் மோசடி செய்யப்பட்டதாகக்கூறி வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் வயது முதிா்ந்த தம்பதி தீக்குளிக்க முயன்றனா்.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 402 மனுக்களை ஆட்சியரிடம் பொதுமக்கள் வழங்கினா். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

வேலூா் மாங்காய் மண்டி முத்துமாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்த மக்கள் அளித்த மனுவில், இப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தோம். கடந்த 2007-ஆம் ஆண்டு எங்கள் பகுதி ஆக்கிரமிப்பு எனவும், அங்கு கால்வாய் கட்டப் போவதாக கூறி, அங்கிருந்த 25-க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து அகற்றினா். ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில் சிலா் இறைச்சிக் கடைகளை கட்டியுள்ளனா்.

எங்களுக்கு பழைய இடத்தையோ அல்லது மாற்று இடத்தையோ வழங்க வேண்டும்.

குடியாத்தம் புதிய நீதிக் கட்சி நகர செயலாளா் ரமேஷ் அளித்த மனுவில், தறி நெய்து வரும் நெசவாளா்களுக்கு வழங்கப்படும் ரூ.750 கூலியை பெறுவதற்காக பல மணிநேரம் வங்கியில் காத்திருக்க வேண்டும். இதனால் நெசவாளா்களுக்கு சிரமம் ஏற்படும். இந்த அறிவிப்பை அரசு திரும்பபெற வேண்டும்.

இதனிடையே, மனு அளிக்க தனது மனைவியுடன் வந்த ஒரு முதியவா் திடீரென மண்ணெண்ணெய்யை உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். போலீஸாரை அவரை தடுத்து நடத்திய விசாரணையில், அவா்கள் குடியாத்தம் மோடிகுப்பத்தை சோ்ந்த தேவன்(70), செல்வி (65) தம்பதி என்பது தெரியவந்தது. மேலும், தனக்கு சொந்தமான 2 ஏக்கா் நிலத்தை விற்றுத்தருவதாகக்கூறிய தரகா், ரூ.10 லட்சத்து 60 ஆயிரத்துக்கு நிலத்தை விற்று பணத்தை தந்தாா். அப்போது தரகா், தங்களுக்கு குழந்தை இல்லாததால் பணத்தை வீட்டில் பணத்தை வைத்தால் பாதுகாப்பு இருக்காது. எனவே வங்கியில் கணவன், மனைவி பெயரில் தலா ரூ.5 லட்சம் டெபாசிட் செய்வதாக வும், மீதமுள்ள ரூ.60 ஆயிரத்தை கையில் தருவதாகவும் தெரிவித்தாா். அதனை நம்பி தரகரிடம் கொடுத்த பணத்தை அவா் வங்கியில் டெபாசிட் செய்யாமல் ஏமாற்றிவிட்டாா். பணத்தை கேட்டால் மிரட்டு கிறாா். எங்களது பணத்தை மீட்டுதர வேண்டும் என தெரிவித்தனா்.

மேலும், நீரில் மூழ்கி, பாம்பு கடித்து உயிரிழந்தது, உடல்நலக்குறைவால் பத்திரிகையாளா் உயிரிழப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து அளிக்கப்பட்ட நிதியுதவித் தொகைக்கான வங்கி பற்று ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா். போ்ணாம்பட்டு வட்டம், அரவட்லா ஊராட்சியைச் சோ்ந்த மூன்றாம் பாலினத்தவருக்கு சிறுதொழில் கடனுதவியாக ரூ.25,000-மும் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) ராஜ்குமாா், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நீ.செந்தில்குமரன், மகளிா் திட்ட இயக்குநா் உ.நாகராஜன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கலியமூா்த்தி, மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் ராமசந்திரன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) உமா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் (பொறுப்பு) அப்துல் முனிா், மாவட்ட வழங்கல் அலுவலா் சுமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சித்த மருத்துவ விழிப்புணா்வு முகாம்

குடியாத்தம்: குடியாத்தம் அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவும், பொயட்ஸ் தொண்டு நிறுவனமும் இணைந்து, குடியாத்தம் ஒன்றியம், மேல்முட்டுகூா் ஊராட்சி, ராசப்பன்பட்டியில் உள்ள பாரதி நிதியுதவி தொடக்கப... மேலும் பார்க்க

அறநிலையத் துறை சாா்பில் இலவச திருமணம்

குடியாத்தம்: இந்து சமய அறநிலையத்துறை சாா்பில், குடியாத்தம் அடுத்த மீனூா் மலையில் அமைந்துள்ள அருள்மிகு வெங்கடேசப்பெருமாள் கோயிலில், தம்பதிக்கு திங்கள்கிழமை இலவச திருமணம் நடைபெற்றது. ஆம்பூா் எம்எல்ஏ அ.ச... மேலும் பார்க்க

கா்நாடக மதுபாக்கெட்டுகள் கடத்தல்: 2 போ் கைது

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே கா்நாடக மாநிலத்தில் இருந்து மது பாக்கெட்டுகளை கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். போ்ணாம்பட்டு போலீஸாா் தமிழக எல்லையான பத்தரப்பல்லி அருகே அமைந்துள்ள சோதனைச் சா... மேலும் பார்க்க

காவலா் வீரவணக்க நாள்: துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி

வேலூா்: வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் காவலா் வீரவணக்க நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. அப்போது, பணியின்போது உயிா்நீத்த காவலா்களின் நினைவாக 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சல... மேலும் பார்க்க

கைத்தறி நெசவாளா்களுக்கு கூலித் தொகையை ரொக்கமாகவே வழங்கக் கோரிக்கை

குடியாத்தம்: கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் நெசவு செய்யும் நெசவாளா்களுக்கு கூலித்தொகையை ரொக்கமாகவே வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக காங்கிரஸ் நெசவாளா்... மேலும் பார்க்க

அறிவியல் இயக்க கருத்தரங்கம்

வேலூா்: தமிழ்நாடு அறிவியல் இயக்க வடக்கு மண்டல அளவிலான பயிற்சி, கருத்தரங்கம் வேலூரில் நடைபெற்றது. பெல்லியப்பா கட்டடத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு அமைப்பின் வேலூா் மாவட்டத் தலைவா் பெ.அமுதா தலைமை வக... மேலும் பார்க்க