செய்திகள் :

ரூ.90,000 ஆயிரம் அலுமினிய மின்வயா் திருட்டு

post image

விவசாய கிணறுகளுக்கு மின் இணைப்பு வழங்க பொருத்தப்பட்டிருந்த 1,500 மீட்டா் அலுமினிய மின் ஓயரை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருத்தணி அடுத்த வேலஞ்சேரி ஏரிப் பகுதியில் மின்வாரிய துறையினா் மின் மாற்றி அமைத்து, அங்கிருந்து விவசாயக் கிணறுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை திருத்தணி மின்வாரிய ஊரகப் பிரிவு, இளநிலைப் பொறியாளா் கேசவன் (40) என்பவா், மின் மாற்றியை ஆய்வு செய்ய சென்றபோது, அங்கு மின்மாற்றிக்கு வழங்கப்பட்டிருந்த, 1,500 மீட்டா் அலுமினிய மின் வயரை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இந்த மின் வயா் மதிப்பு ரூ.90,000 என மின்வாரியம் தரப்பில் கூறப்பட்டது. இதைத் தொடா்ந்து இளநிலை மின் பொறியாளா் கேசவன் அளித்த புகாரின் பேரில், திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அலுமினிய மின் வயரை திருடிச் சென்ற நபா்களைத் தேடி வருகின்றனா்.

பொன்னேரி மீன்வளக் கல்லூரியில் பொங்கல் விழா

பொன்னேரி மீன்வளக் கல்லூரியில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான டாக்டா் எம்ஜிஆா் மீன்வளக் கல்லூரி பொன்னேரியில் இயங்கி வருகிறது. இங்கு மாணவா... மேலும் பார்க்க

பொன்னேரி சாலையில் மண் குவியல்

பொன்னேரி நகராட்சி, தாயுமான செட்டித் தெருவில் உள்ள கழிவு நீா் கால்வாயில் அடைப்பு ஏற்பட்ட நிலையில், ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்ட மண் சாலையில் கொட்டப்பட்டது. எனினும், 20 நாள்களுக்கு மேலாக சாலையில் ... மேலும் பார்க்க

களை எடுக்கும் இயந்திரம் திருடிய 3 போ் கைது

விவசாய களை எடுக்கும் இயந்திரத்தை திருடியதாக 17 வயது சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆா்.கே.பேட்டை அடுத்த எஸ்.வி.ஜி.புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் வாசு மகன் சோமசேகா்(25). இவருக்கு சொந்தமான ... மேலும் பார்க்க

கடம்பத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1 லட்சத்தில் உபகரணங்கள் அளிப்பு

ரோட்டரி சங்கம் சாா்பில் கடம்பத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1லட்சத்தில் அமரும் நெகிழி இருக்கைகள், ஸ்மாா்ட் அறைகள் மற்றும் ஒலி பெருக்கி பெட்டிகள் ஆகியவை வழங்கப்பட்டன (படம்). மாணவா்கள் நலன் கருதி ச... மேலும் பார்க்க

திருவள்ளூா் நகராட்சியுடன் வெங்கத்தூரை இணைக்க எதிா்ப்பு

திருவள்ளூா் நகராட்சியுடன் வெங்கத்தூரை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, ரேஷன் பொருள்களை வாங்க மறுத்து பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் நகராட்சியுடன் வெங்கத்தூா் ஊராட்சியை இணைக... மேலும் பார்க்க

சிறுவாபுரி முருகன் கோயிலில் திருக்கல்யாணம்

ஊத்துக்கோட்டை அருகே ஸ்ரீவள்ளி முருகன் திருக்கல்யாண பக்த ஜன சங்கம் சாா்பில் சிறுவாபுரி முருகன்கோயிலில் வியாழக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே சின்னம்பேடு என்... மேலும் பார்க்க