செய்திகள் :

"ரெட் தொகுதிகள்; களத்தில் இறங்குங்க" திமுக எம்.பி-களுக்கு ஸ்டாலின் போட்ட உத்தரவு!

post image

எம்.பி-கள் கூட்டம்:

சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. எப்போதுமே நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக திமுக எம்.பி-களை சந்தித்து முதல்வர் பேசுவது வழக்கம். தற்போது எந்த கூட்டத்தொடரும் இல்லாத நிலையில் சந்திப்பு ஏற்பாடு செய்ததே பேசுபொருளானது. இந்த நிலையில் அனைத்து உறுப்பினர்களைச் சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். கூட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்துக் கலந்துகொண்ட எம்.பி-க்கள் சிலரிடம் பேசினோம். "கூட்டத்தொடர் இல்லாத சமயங்களில் முதல்வர் எங்களை அழைத்துப் பேசுவது எங்களுக்கே புதிதான ஒன்றாக இருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

பெரும்பாலான உறுப்பினர்களுக்கு எதற்கான கூட்டம் என்பது கலந்துகொள்ளும் வரையில் தெரியவில்லை. கூட்டத்தில் பேசிய முதல்வர் 'தேர்தல் நெருங்குகிறது. இங்கிருக்கும் அனைவருமே கடுமையாக வேலை செய்யவேண்டும். நாடாளுமன்ற கூட்டம் இல்லைன்னு சொல்லி வீட்டிலிருந்துவிட கூடாது. இங்க இருக்கும் 33 உறுப்பினர்களுக்கும் தலைமை கழகம் மிகமுக்கிய பணிகளைக் கொடுக்கப் போகிறது. ஒவ்வொருவருக்குமே ஒரு ஃபைல் கொடுக்கப்படும். அதில் சில தொகுதிகளின் பெயர்கள் இருக்கும். அந்த தொகுதிகளில் நீங்கள் சென்று வேலை பார்க்கணும். அந்த தொகுதி நிர்வாகிகள் தொடங்கி மாவட்டச் செயலாளர் வரை அனைவரோடும் ஒத்துழைத்து பணியாற்றவேண்டும்' என்று சொல்லியிருந்தார்.

ரெட் தொகுதி:

மொத்தம் 120 தொகுதிகளைப் பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள். இந்த தொகுதிகள் அனைத்துமே வெற்றி பெறக் கடினம் எனக் கண்டறியப்பட்ட ரெட் தொகுதிகள் தான். ஒருசிலருக்கு இரண்டு தொகுதிகள், சிலருக்கு மூன்று, நான்கு தொகுதிகள் வரை பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த தொகுதிகளின் வெற்றி தோல்விக்கு நீங்களும் கேள்வி கேட்கப்படுவீர்கள் என்று சொல்லியிருக்கிறார் தலைவர். குறைந்தது வாரத்தில் நான்கு நாள்களாவது தொகுதியில் தங்கி மக்களைச் சந்திக்க வேண்டும். தொகுதி மக்களின் குறைகளைக் கவனமாகக் கேட்டு அதனைப் பூர்த்தி செய்துகொடுக்க வேண்டும். இதற்கு மேலாக நாங்கள் செய்த பணிகள் குறித்து 15 நாள்களுக்கு ஒருமுறை தலைவருக்கே அறிக்கை கொடுக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தச் சொல்லியிருக்கிறார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

ஏற்கனவே தொகுதி வாரியாக தொகுதி பொறுப்பாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதிகளைப் பிரித்துக் கொடுத்து சட்டமன்ற தேர்தல் பணிகளை வேகப்படுத்தியிருக்கிறார். கூட்டணிக் கட்சிகள் கைவசம் இருக்கும் தொகுதிகள் அருகில் உள்ள திமுக உறுப்பினர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் அவர்கள் சார்ந்த தொகுதி நிலவரம் தெரியும். நாடாளுமன்ற உறுப்பினர்களும் களத்தில் இணைந்திருப்பது தேர்தல் வெற்றியை எளிதாக்கும். எங்கள் பணிகளைக் கண்காணிக்கவும், ஒருங்கிணைக்கவும் தலைமை கழகத்திலிருந்து உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது" என்றார்கள் விரிவாக.

VIJAY வேண்டாம்; இங்க வாங்க - ANNAMALAI TTV-ன் PLAN B? | GST குறைப்பு: ஆவின் சதி? | Imperfect Show

* Amit Shah: "மோடியிடம் பிடித்த குணம், விடுமுறை எடுக்காதவர், வரலாறு காணாத பிரதமர்'' - அமித் ஷா பேட்டி * GST: AC & TV விற்பனை அமோகம்?* பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள் - கே.டி.ராமராவ்* GST : ஆவின... மேலும் பார்க்க

``பிரேசில் ஜனநாயகம், இறையாண்மையும் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டவை அல்ல" - ஐ.நாவில் தெறிக்கவிட்ட லுலா

ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்கிறது என்று அமெரிக்கா 25 சதவிகித வரி பிளஸ் கூடுதல் 25 சதவிகித வரி விதித்த இரண்டு நாடுகள் - இந்தியா மற்றும் பிரேசில். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு தொடர்ந்து ... மேலும் பார்க்க

USA: பிரான்ஸ் அதிபர் காரை தடுத்த அமெரிக்க போலீஸ்; நடந்தே தூதரகம் சென்ற மக்ரோன் - Viral Video

காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு எதிராக உலகின் பல நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராகவும், அமெரிக்காவுக்கு எதிராகவும் திரும்பியிருக்கின்றன. குறிப்பாக பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்காத பல நாடுகளும்... மேலும் பார்க்க

``சசிகலா சிலரால் சூழப்பட்டிருக்கிறார், அதனால் விலகிவிட்டேன்" - வெண்மதி பரபரப்பு குற்றச்சாட்டு

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க எனும் கட்சி பல துண்டுகளாக சிதறியது. இதில் ஆரம்பத்தில் கூடுதல் கவனம் பெற்றது சசிகலா தரப்பு. ஆனால், காலப்போக்கில் எடப்பாடி தலைமையிலான... மேலும் பார்க்க

``எனக்காக இவர்கள் நோபல் பரிசு கேட்கிறார்கள்; ஆனால், நான் விரும்பும் பரிசு இதுதான்'' - ட்ரம்ப் பேச்சு

ஆறு ஆண்டுகள் கழித்து ஐ.நா சபையில் உரையாற்றியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். 'ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து ஏழு போர்களை நிறுத்தியுள்ளேன். எனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்' என்று ட்ரம்ப் அடிக்கடி கூ... மேலும் பார்க்க