செய்திகள் :

லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் பற்றிய தகவலுக்கு ரூ. 10 லட்சம்! என்ஐஏ

post image

பிரபல ரெளடி லாரன்ஸ் பிஷ்னோய்யின் சகோதரர் குறித்து தகவல் அளித்தால் ரூ. 10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட லாரன்ஸ் பிஷ்னாய் தற்போது குஜராத்தில் உள்ள சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் பாடகர் சித்து மூஸேவாலா, மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் கொலை சம்பவத்துக்கு லாரன்ஸ் பிஷ்னோய்யின் கும்பல் பொறுப்பேற்றது நாட்டையே உலுக்கியுள்ளது.

மேலும், காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை பிஷ்னோய் கும்பலின் உதவியுடன் இந்திய அரசு கொன்றதாக சமீபத்தில் குற்றச்சாட்டை எழுப்பியது.

இதனிடையே, பிளாக்பக் இனமான்களை ஹிந்தி நடிகர் சல்மான் கான் வேட்டையாடியதற்காக அவரை பலமுறை பிஷ்னோய் கும்பல் கொலை செய்ய முயற்சித்துள்ளது.

இதையும் படிக்க : லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் அடுத்த இலக்கு ராகுல் காந்தி! - ஒடிசா நடிகர் பதிவால் சர்ச்சை

என்ஐஏ அறிவிப்பு

இந்த நிலையில், பல்வேறு வழக்குகளில் என்ஐஏவால் தேடப்பட்டு வரும் குற்றவாளியும் லாரன்ஸ் பிஷ்னோய்யின் சகோதரருமான அன்மோல் பிஷ்னோய் குறித்த தகவலை தெரிவித்தால் ரூ. 10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்மோல் பிஷ்னோய் மீது 2022ஆம் ஆண்டில் இரண்டு குற்றப்பத்திரிகையை என்ஐஏ தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரியாணா எம்எல்ஏக்கள் பதவியேற்பு!

ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் 15-வது மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களாக வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக... மேலும் பார்க்க

உ.பி.யில் தடம்புரண்ட சரக்கு ரயில்!

உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது.பஞ்சாப் மாநிலம் குரு ஹர் சஹாய் ரயில் நிலையத்தில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் ரயில் நிலையம் நோக்கி சென்று கொ... மேலும் பார்க்க

பெங்களூரு கட்டட விபத்தில் மேலும் ஒருவரின் உடல் மீட்பு: 9 ஆக உயர்ந்த பலி!

பெங்களூரு கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் மேலும் ஒருவரின் உடல் வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூரூவில் கடந்த சில நாள்களாகப் பெ... மேலும் பார்க்க

கேரளத்தில் கனமழை: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

கேரளத்தின் பல பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்துவருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் மாநிலத்தில் ஐந... மேலும் பார்க்க

டானா புயல்: உயிர் பலியில்லாத வகையில் முன்னெச்சரிக்கை- மோகன் சரண் மாஜி

புவனேசுவரம்: டானா புயல் வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை கரையை கடந்தபோது, சூறைக்காற்றுடன் கனமழை பெய்த நிலையில், இந்த புயலால் ஒருவர் கூட பலியானதாகவோ காயமடைந்ததாகவோ தகவல் இல்லை என்று... மேலும் பார்க்க

மகாராஷ்டிர தேர்தல்: காங்கிரஸ் இன்று முக்கிய ஆலோசனை!

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து தில்லியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. மகாராஷ்டிரத்தில் 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி தோ்தல் நடைப... மேலும் பார்க்க