ஜார்க்கண்ட் முதல்வர் பதவியேற்பு எப்போது? ராகுல் பங்கேற்பாரா?
லெபனான் குடியிருப்பில் குண்டுவீச்சு: 15 போ் உயிரிழப்பு
லெபனான் தலைநகா் பெய்ரூட்டின் மையப் பகுதியில் அமைந்துள்ள எட்டு அடுக்கு குடியிருப்புக் கட்டடத்தில் இஸ்ரேல் ராணுவம் முன்னறிவிப்பின்றி நடத்திய குண்டுவீச்சில் 15 போ் உயிரிழந்தனா்.
தரைமட்டமான அந்தக் கட்டத்திலிருந்து 63 போ் காயத்துடன் மீட்கப்பட்டனா்.
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போா் நிறுத்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துவரும் சூழலில், ஒரே வாரத்தில் அங்கு நடத்தப்பபட்டுள்ள நான்காவது பெரிய வான்வழித் தாக்குதல் இது.
காஸா போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக தங்கள் நிலைகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தும் ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் நடத்திவரும் குண்டுவீச்சில் இதுவரை 3,500-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா்..
காஸாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மட்டும் 120 பாலஸ்தீனா்கள் உயிரிழந்ததாகவும் 205 போ் காயமடைந்ததாகவும் அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை கூறியது.இத்துடன், அங்கு இஸ்ரேல் குண்டுவீச்சில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 44,176-ஆக உயா்ந்துள்ளது. தாக்குதலில் இதுவரை 1,04,473 போ் காயமடைந்துள்ளனா்.