போர் நிறுத்தம் கண் துடைப்பா? பாகிஸ்தான் மீண்டும் டிரோன் தாக்குதல்!
வதந்திகளை நம்ப வேண்டாம்.. மக்களை எச்சரிக்கும் முதல்வர் மான்!
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்துவரும் பதட்டங்களுக்கு மத்தியில் மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகில் வெடிகுண்டு, ட்ரோன். ஏவுகணை ஆகியவற்றை கண்டாலோ அல்லது அதன் பாகங்கள் தென்பட்டாலோ அதனருகே விரைந்துச் செல்ல வேண்டாம் உடனடியாக மக்கள் காவல்துறை அல்லது ராணுவத்திற்கு உரிய தகவல் அளிக்கவும். அவர்கள் அங்கு வந்து அதைச் செயலிழக்கச் செய்வார்கள். மேலும் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்றுவரும் பதற்றநிலையைக் கண்டு மக்கள் பீதியடையவோ, வதந்திகளை நம்பவோ வேண்டாம்.
ராணுவம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் ஒரு முறை தகவல் தெரிவித்து வருகிறது. அவ்வாறு எதுவாக இருந்தாலும் மக்கள் தங்குவது, உணவு போன்ற அனைத்து வசதிகளும் வழங்க அரசு தயாராக உள்ளது. இதற்கிடையில், மாணவர் நலனைப் பாதுகாக்கப் பஞ்சாப் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதற்கிடையில் எந்தவொரு மாணவரும் தேவையின்றி வளாகத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பஞ்சாப் அமைச்சர் கூறுகையில்,
உயர்கல்வித் துறை உத்தரவின்படி, நிறுவனங்கள் விடுமுறை அறிவித்து மாணவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கலாம் என்றாலும், பாதுகாப்பு, சூழ்நிலை, போக்குவரத்து அல்லது தனிப்பட்ட காரணங்களால், மாணவர்கள் கல்வி நிறுவனங்களை விட்டு வெளியேறக் கட்டாயப்படுத்த வேண்டாம். வீடு திரும்ப இயலாத ஒவ்வொரு மாணவர்களுக்கும் உணவு, தங்கும் வசதி என அனைத்து வசதிகளும் வழங்கப்படும். விருப்பமின்றி எந்த ஒரு மாணவர்களும் வெளியேற்ற வேண்டாம் என்று கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள நான்கு விமானப்படைத் தளங்களை இந்தியாத் தாக்குதல் நடத்தியதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: குருப்பெயர்ச்சி பலன்கள் 2025