செய்திகள் :

வத்தலகுண்டு: உதவி செய்வது போல் நடித்து ரூ. 10 லட்சம் திருட்டு; 2 மணி நேரத்தில் பணத்தை மீட்ட போலீஸ்

post image

மதுரை மாவட்டம் டி.வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் பரமசிவம் (80). இவர் கோயமுத்தூரில் உள்ள தனது மகன் வீட்டிற்குச் சென்று விட்டு அங்கிருந்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள வங்கிக் கணக்கிற்கு ரூ. 10 லட்சம் பணம் செலுத்துவதற்காக பணத்துடன் வத்தலக்குண்டு பேருந்து நிலையம் வந்துள்ளார்.

இரவு நேரம் ஆகிவிட்டது என்பதால் வத்தலகுண்டில் தங்கி விட்டு காலையில் வங்கிக்குச் செல்லலாம் என நினைத்து பேருந்து நிலையத்திலிருந்து பரமசிவம் வெளியே நடந்து சென்ற போது முதியவரிடம் இளைஞர் ஒருவர் உதவி செய்து போல் நடித்து பேருந்து நிலையத்திற்கு அருகிலிருந்த ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

திருடு போன பணத்தை மீட்ட போலீசார்
திருடு போன பணத்தை மீட்ட போலீசார்

இந்நிலையில் பரமசிவம் அசந்த நேரத்தில் ரூபாய் 10 லட்சம் பணம் வைத்திருந்த பெட்டியை எடுத்துக் கொண்டு அந்த இளைஞர் எஸ்கேப் ஆகி விட்டர். பணம் பறிபோனதால் பதறிய முதியவர் பரமசிவம் வத்தலகுண்டு காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார்.

உடனடியாக களம் இறங்கிய இன்ஸ்பெக்டர் கௌதமன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா தலைமையிலான போலீசார் சிசிடிவி காட்சிகளைச் சோதனையிட்டனர்.

அப்போது முதியவரிடம் பணப்பெட்டியைப் பறித்துச் சென்ற அந்த இளைஞர் ஒரு ஆட்டோவில் தப்பிச் சென்றது சிசிடிவி காட்சியின் மூலம் தெரியவந்தது. தொடர் விசாரணை மேற்கொண்ட போலீசார் ரூ. 10 லட்சத்துடன் தப்பிய அந்த இளைஞர் சாமியார் மூப்பனூர் கிராமத்தில் பதுங்கி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதனை அடுத்து அங்குச் சென்றதை வைத்து அவரின் வீட்டைக் கண்டுபிடித்து போலீசார் சுற்றி வளைத்தனர்.

திருடு போன பணத்தை மீட்ட போலீசார்
திருடு போன பணத்தை மீட்ட போலீசார்

வீடு பூட்டி இருப்பதைக் கண்டு வீட்டை உடைத்து உள்ளே சென்ற போலீசார் அங்கு முதியவரிடம் கொள்ளையடிக்கப்பட்ட ரூபாய் 10 லட்சம் பணம் பெட்டியில் அப்படியே இருப்பதைக் கண்டு அதனைக் கைப்பற்றினர். மேலும் அந்த இளைஞரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

இதனிடையே புகார் அளித்த இரண்டு மணி நேரத்தில் ரூபாய் 10 லட்சம் பணத்தை மீட்டுக் கொடுத்த வத்தலகுண்டு போலீசாருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சட்டவிரோத மண் விற்பனை: ”நாளைக்கு நாங்கள் இல்லாமல் போகலாம்”- முதல்வர் பாராட்டிய நிமல் ராகவன் ஆதங்கம்!

பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 1 வது வார்டில் அமைந்துள்ள செம்புரான் குளத்தில் மண் எடுக்கப்பட்டு தனியாரிடம் விற்பனை செய்து வந்துள்ளனர். இது குறித்து பாக்கியம் நகரைச் சேர்ந்த நீர் நிலைகள் மீட்பு பண... மேலும் பார்க்க

``உங்க ஆதாரில் தீவிரவாதிகள் சிம் வாங்கி பணப் பரிவர்த்தனை'' - முதியவரை மிரட்டி ரூ.23 கோடி கொள்ளை

தொடரும் டிஜிட்டல் கைது மோசடி சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவு, மும்பை கிரைம் பிராஞ்ச் என்று பல பொய்களைச் சொல்லி அப்பாவி பொதுமக்களை டிஜிட்டல் முறையில் போலியாகக் கைது செய்து அவர்களிடம் இருக்கும் மொத்தப் பணத்தைய... மேலும் பார்க்க

``ரகசிய கேமரா, பாலியல் சீண்டல்'' - மாணவிகள் புகார், டெல்லி சாமியார் தலைமறைவு - நடந்தது என்ன?

மாணவிகள் புகார் டெல்லி விகார் குஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்வி நிறுவனத்தில் இயக்குநராக இருந்தவர் சுவாமி பார்த்தசாரதி. சுவாமி பார்த்தசாரதி அக்கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவிகளை இரவு ந... மேலும் பார்க்க

``அமித் ஷா, அஜித் தோவலிடம் கான்பரன்ஸ் கால்'' - வங்கி அதிகாரியிடம் ரூ.4 கோடி மோசடி செய்த உறவினர்கள்

தினம் தினம் பொதுமக்கள் ஏதாவது ஒரு வழியில் மோசடியால் பாதிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள். இதில் டிஜிட்டல் கைது மோசடி ஒட்டுமொத்த நாட்டையும் கலங்கடித்துக்கொண்டிருக்கிறது. புனேயைச் சேர்ந்த ஓய்வு பெற... மேலும் பார்க்க

டெல்லி ஆசிரமத்தில் ரெய்டு: கல்லூரி மாணவிகள் 17 பேருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் தலைமறைவு

டெல்லியைச் சேர்ந்த மதகுரு சுவாமி சைதன்யானந்தா என்று அழைக்கப்படும் பார்த்த சாரதி சொந்தமாக மேனேஜ்மெண்ட் கல்லூரி ஒன்றின் நிர்வாகியாக இருந்து வருகிறார். வசந்த் குஞ்ச் பகுதியில் செயல்படும் ஸ்ரீ சாரதா இன்ஸ்... மேலும் பார்க்க

போலீஸிடம் தங்க மோசடி செய்த சகோதரிகள் - கைதான பின்னணி

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அந்தோணி ஜார்ஜ் பிரபு (37). இவர், கடந்த 2013-ம் ஆண்டு காவல்துறையில் பணிக்குச் சேர்ந்தார். சென்னை ஆயுதப்படையில் காவலராகப் பணியிலிருந்த அந்தோணி ஜார்ஜ் பிரபுவுக்கு கடந... மேலும் பார்க்க