செய்திகள் :

டெல்லி ஆசிரமத்தில் ரெய்டு: கல்லூரி மாணவிகள் 17 பேருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சாமியார் தலைமறைவு

post image

டெல்லியைச் சேர்ந்த மதகுரு சுவாமி சைதன்யானந்தா என்று அழைக்கப்படும் பார்த்த சாரதி சொந்தமாக மேனேஜ்மெண்ட் கல்லூரி ஒன்றின் நிர்வாகியாக இருந்து வருகிறார்.

வசந்த் குஞ்ச் பகுதியில் செயல்படும் ஸ்ரீ சாரதா இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியன் மேனேஜ்மெண்ட் என்ற கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பார்த்த சாரதி பாலியல் தொல்லை கொடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பார்த்த சாரதி மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசுவது, ஆபாசமாக மெசேஜ் அனுப்புவது, கண்ட இடத்தில் தொடுவது போன்ற காரியங்களில் ஈடுபட்டதாக மாணவிகள் போலீஸில் புகார் செய்துள்ளனர். இக்கல்லூரியில் 70 பேர் படித்து வருகின்றனர்.

பாலியல் தொல்லை கொடுத்த சாமியார்
பாலியல் தொல்லை கொடுத்த சாமியார்

பார்த்த சாரதி தெற்கு டெல்லியில் உள்ள தட்சிணாம்ய ஸ்ரீ சாரதா பீடம், சிருங்கேரி ஆசிரமத்தின் பொறுப்பாளராக இருந்து வந்தார். கல்வி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அங்குப் பயிலும் மாணவிகளிடம் சாமியாரின் கோரிக்கையை நிறைவேற்றும்படி சொல்லி நிர்ப்பந்தம் செய்துள்ளனர்.

அதோடு ஆசிரமத்தில் பணியாற்றும் வார்டன்கள் மாணவிகளை அழைத்துச்சென்று சாமியாரிடம் அறிமுகம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக 17 மாணவிகள் சேர்ந்து போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.

அவர்களிடம் போலீஸார் வாக்குமூலம் வாங்கி இருக்கின்றனர். மாணவிகள் மட்டுமல்லாது மாணவர்களும் சாமியாருக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்து இருப்பதாக துணை போலீஸ் கமிஷனர் அமித் கோயல் தெரிவித்துள்ளார்.

அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சாமியார் மீது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், தற்போது சாமியார் தலைமறைவாகிவிட்டதாகவும் அவரைத் தேடி வருவதாகவும் அமித் கோயல் தெரிவித்தார். போலீஸார் ஆசிரமத்தில் ரெய்டு நடத்தியுள்ளனர்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

அதோடு அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். சாமியார் ஆக்ராவிற்குத் தப்பிச் சென்று இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரைப் பிடிக்க தனிப்படை போலீஸார் ஆக்ராவிற்கு விரைந்துள்ளனர். சாமியாரின் கல்வி நிறுவனத்தில் ரெய்டு செய்தபோது ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

அதில் தூதரக அதிகாரிகள் பயன்படுத்தும் போலி நம்பர் பிளேட் பயன்படுத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாலியல் புகாரைத் தொடர்ந்து ஆசிரமத்திலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக ஆசிரம தலைமை நிர்வாகம் அறிவித்துள்ளது.

போலீஸிடம் தங்க மோசடி செய்த சகோதரிகள் - கைதான பின்னணி

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அந்தோணி ஜார்ஜ் பிரபு (37). இவர், கடந்த 2013-ம் ஆண்டு காவல்துறையில் பணிக்குச் சேர்ந்தார். சென்னை ஆயுதப்படையில் காவலராகப் பணியிலிருந்த அந்தோணி ஜார்ஜ் பிரபுவுக்கு கடந... மேலும் பார்க்க

குடியாத்தம்: தந்தை முகத்தில் மிளகாய் பொடி அடித்து குழந்தை கடத்தல் - பதற வைத்த சிசிடிவி காட்சிகள்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டை பவளக்காரத் தெருவைச் சேர்ந்தவர் வேணு (வயது 33). பெங்களூரில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினீயராக வேலைப் பார்த்து வரும் வேணு, கடந்த 5 ஆண்டுகளாக வீ... மேலும் பார்க்க

`தலைமுடி உதிர்வு' - தீக்குளித்து உயிரை மாய்த்த கல்லூரி மாணவி; குமரியில் அதிர்ச்சி - என்ன நடந்தது?

உயிரை மாய்த்த கல்லூரி மாணவி அஸ்வினிகன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள காரங்காடு பகுதியை சேர்ந்தவர் ஞானசெல்வன். இவரது மனைவி ரூபி ஆன்றணி பாய். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஞானசெல்வன் வெளிநா... மேலும் பார்க்க

தருமபுரி குழந்தை திருமணம்: கடமையைச் செய்யாமல் இருக்க `லஞ்சம்' - பெண் இன்ஸ்பெக்டர் சிக்கியது எப்படி?

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகாவுக்காவிற்கு உட்பட்ட கெண்டிகானஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மணி என்கிற நிர்மல்குமார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியைக் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் க... மேலும் பார்க்க

உ.பி வரதட்சணை கொடுமை: "5 லட்சம் வாங்கிட்டு வா" - பாம்பை விட்டு மனைவியைக் கடிக்க வைத்த கணவன்

உத்தரப்பிரதேசத்தில் வரதட்சணை கொண்டு வராத பெண்ணை தனி அறையில் அடைத்து பாம்பை விட்டுக் கடிக்க வைத்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது. கான்பூரைச் சேர்ந்த ரேஷ்மா என்ற பெண் ஷாநவாஸ் என்பவரைச் சமீபத்தில் திருமணம... மேலும் பார்க்க

உபி: காதலியைக் கொன்று உடலுடன் செல்ஃபி எடுத்த இளைஞர்; யமுனையில் தேடும் போலீஸ்! - என்ன நடந்தது?

உத்தரபிரதேசம் மாநிலம், கான்பூர் காவல்துறையினர் 20 வயது பெண் கொலை வழக்கில் 2 இளைஞர்களை கைது செய்துள்ளனர். அகன்ஷா என்ற அந்த 22 வயது பெண்ணின் உடல் சூட்கேஸில் அடைக்கப்பட்டு யமுனா நதியில் மூழ்கடிக்கப்பட்டு... மேலும் பார்க்க