செய்திகள் :

வயநாடு: `தந்தைக்காக 17 வயதில் பிரசாரம்; இன்று எனக்காக..!” - சென்டிமென்ட் பிரியங்கா

post image

வயநாடு நாடாளுமன்ற தொகுதி எம்.பி‌ பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்திருந்த நிலையில், அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற நவம்பர் 13 -ம் தேதி நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. கேரள மாநிலத்தை ஆளும் கட்சியான ஜனநாயக இடது முன்னணி சார்பில் சத்யன் போட்டியிடுகிறார். பா.ஜ.க தரப்பில் நவ்யா ஹரிதாஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக சில மாதங்களுக்கு முன்பே அக்கட்சியின் தலைமை‌ அறிவித்திருந்தது.

பிரியங்கா காந்தி

வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், சோனியா காந்தி ராகுல் காந்தி மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் சூழ பேரணி நடத்தி வேட்புமனுவினை தாக்கல் செய்திருக்கிறார் பிரியங்கா காந்தி. நீண்ட கால அரசியல் பாரம்பர்ய பின்னணி கொண்டிருந்தாலும், முதன் முறையாக தேர்தல் அரசியலில் களமிறங்கியிருக்கிறார் பிரியங்கா காந்தி.

பேரணி கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, "என்னுடைய தந்தை ராஜிவ் காந்திக்காக முதன் முதலாக 17 வயதில் தேர்தல் பரப்புரை செய்துள்ளேன். கடந்த 35 ஆண்டுகளாக கட்சி நிர்வாகிகளுக்காக பல தேர்தல்களில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளேன். என்னுடைய தாய், தந்தை, சகோதரர், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்காகவும் பிரசாரம் செய்துள்ளேன்.

ஆனால், தற்போது எனக்காக ஓட்டு கேட்டு முதல் முறையாக வந்திருக்கிறேன். மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டத்தில் சாதி , மத பேதமின்றி அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர். அதுபோலவே இருக்கிறது இன்றயை பேரணி. வயநாடு மக்களுக்கு சேவையாற்ற எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் " என சென்டிமென்ட்டாக பேசி முடித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88

`ரயில்வே கம்பளிப் போர்வை' - வெளியான RTI தகவல்; நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க செய்ய வேண்டிதென்ன?

ரயிலில் ஏசி பெட்டிகளின் பயணம் செல்லும்போது, அங்கு வழங்கப்படுக்கிற வெள்ளை நிற போர்வைகளையும் கம்பளிப் போர்வையையும் பெரும்பாலானோர் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், அந்தப் போர்வைகள் சுத்தமாக பராமரிக்கப்படுக... மேலும் பார்க்க

தரைப்பாலத்தில் தேங்கும் தண்ணீர்; அச்சத்துடனே பயணிக்கும் மக்கள் - கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

திண்டுக்கல் மாவட்டம், பழைய கரூர் சாலையில் மக்கள் அதிகம் பயணிக்கும் பிரதான தரைப்பாலம் ஒன்று உள்ளது. ரயில்வே கேட் அடிக்கடி போடுவதால் மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய இந்த தரைப்பாலம் கட்டப்பட்டது. ஆனால் இந்... மேலும் பார்க்க

திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தின் அவல நிலை! - சீரமைப்பார்களா அதிகாரிகள்?

திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் தற்போது குப்பைகள் கொட்டும் இடமாக மாறி, கழிவுநீர் உள்ளே செல்லும் அவல நிலை உருவாகி உள்ளது. மேலும், இரவு நேரங்களில் குற்றச் சம்பவங்கள் நடக்கும் சமூக விரோதிகளின் கூடாரம... மேலும் பார்க்க

Bomb Threat: விமான நிறுவனங்களுக்குத் தலைவலி தரும் வெடிகுண்டு மிரட்டல்கள்; அலைக்கழிக்கப்படும் பயணிகள்

கடந்த சில வாரங்களாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அன்றாடம் தவறாமல் இடம்பெறும் ஒரு செய்தி... விமானங்களுக்கு விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டல்கள். இவற்றின் திடீர் அதிகரிப்பால் அண்மைக் காலமாக ஏராள... மேலும் பார்க்க

வயநாடு: முதன் முறையாகத் தேர்தலில் களமிறங்கும் பிரியங்கா காந்தி; வேட்புமனு தாக்கலுடன் இன்று பேரணி!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றார் ராகுல் காந்தி. விதிமுறைகளின் ஏதாவது ஒரு தொகுதிய... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: சரிந்துவிழும் நிலையில் மின்கம்பம்... அச்சத்தில் மக்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு?

திருப்பத்தூரில் கடந்த ஆண்டு நெடுஞ்சாலையின்நடுவே வரிசையாக மின் விளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டது. இதில், பேருந்து நிலையத்தின் முன் அமைக்கப்பட்ட மின் விளக்கு கம்பங்களில் ஒன்றுதற்போது சேதமடைந்தது, பொதுமக்... மேலும் பார்க்க