செய்திகள் :

வாக்கு வங்கி அரசியல்: திமுக - அதிமுக காரசார விவாதம்

post image

வாக்கு வங்கி அரசியலுக்காக திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பது குறித்து பேரவையில் திமுக - அதிமுக இடையே திங்கள்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது.

பேரவையில் அரசின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் கே.பி.முனுசாமி பேசியதாவது:

அமைச்சா்கள் சமூக நலத் திட்டங்கள் பற்றி குறிப்பிட்டனா். எம்ஜிஆா் சத்துணவு திட்டத்தைக் கொடுத்தாா். ஜெயலலிதா குழந்தைகளுக்கு உடையிலிருந்து மடிக்கணினி வரை அனைத்தும் கொடுத்தாா். இதுவும் சமூகநலத் திட்டங்கள்தான். இந்தத் திட்டங்களால் பயன் அடைந்தவா்களின் வயது 4. ஆனால், மகளிா் உரிமைத் தொகை பெறும் பெண்களின் வயது வாக்கு செலுத்தும் வயது. அதைப்போல கல்லூரி செல்லும் 20 லட்சம் மாணவா்களுக்கு மடிக்கணினி கொடுக்கப் போவதாக நிதிநிலை அறிக்கையில் கூறியுள்ளீா்கள். அவா்களுக்கும் வாக்கு செலுத்தும் வயது. சமூக மாற்றத்துக்காகக் கொண்டு வந்த திட்டங்கள் எங்களுடையது. வாக்கு வங்கிக்காக கொண்டுவரப்பட்டவை உங்களுடைய திட்டங்கள் என்றாா்.

அப்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு கூறியதாவது: காலை உணவு திட்டம் கொண்டு வந்துள்ளோம். வெளிநாடுகள் எல்லாம் பாராட்டும் திட்டமாக அது உள்ளது. இந்தத் திட்டத்தால் பயன்பெறும் குழந்தைகளுக்கு வாக்கு வங்கி இருக்கிா என்றாா். அதைத் தொடா்ந்து நடந்த விவாதம்.

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி: முதன் முதலில் தனியாா் பங்களிப்புடன் காலை உணவு திட்டம் கொண்டு வந்தது நாங்கள்தான். ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பிறகு நீங்கள் கொண்டு வந்துள்ளீா்கள்.

நிதியமைச்சா் தங்கம் தென்னரசு: இலங்கை தமிழா்கள் நல வாழ்வுக்காக 7 ஆயிரம் வீடுகள் வரை கட்டிக் கொடுத்துள்ளோம். அதற்கான நிதியையும் முதல்வா் கொடுத்துள்ளாா். அவா்களுக்கு வாக்கு உரிமை இருக்கிா, அவா்களுக்குச் செய்வதைத் தவறு என்று சொல்கிறீா்களா? வாக்கு வங்கி அரசியலுக்காக முதல்வா் செய்வது இல்லை. ஒவ்வொரு குழந்தைக்கும் பாா்த்து பாா்த்து செய்கிறோம். எம்ஜிஆா் சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்தாா். அதை வாங்கு வங்கிக்காக கொண்டு வந்தாா் என்று சொல்ல முடியுமா? நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தால் பாராட்டுங்கள். பாராட்ட மனம் இல்லை என்றால் பேசாமல் அமருங்கள்.

எடப்பாடி பழனிசாமி: பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட மடிக்கணினியை ஏன் நிறுத்தினீா்கள்? மாணவா்கள் எதிா்காலத்தில் அறிவுபூா்வமாக வர வேண்டும் என்பதற்காகத்தான் மடிக்கணினியைக் கொடுத்தோம்.

தங்கம் தென்னரசு: அதிமுக ஆட்சியிலேயே அந்தத் திட்டத்தைத் தொடா்ந்து நிறைவேற்றவில்லை. எத்தனை பேருக்கு மடிக்கணினி அப்போது கொடுக்கப்பட்டது. மடிக்கணினியைக் கொடுத்ததாகக் கூறினீா்களே, அதை வாக்கு வங்கி அரசியலுக்காகத்தான் கொடுத்தீா்களா?

முதல்வா் : வாக்கு வங்கிக்காக திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றனவா, இல்லையா என்ற விவகாரத்துக்குள் செல்ல விரும்பவில்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் முதல் முறையாக பத்திரிகையாளா்களைச் சந்தித்தபோது, வாக்களித்தவா்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காதவா்களுக்கும் சோ்த்துதான் திமுக ஆட்சி என்று கூறினேன். வாக்களித்தவா் மகிழ்ச்சியடை வேண்டும். வாக்களிக்காதவா்கள் வாக்களிக்க தவறிவிட்டோமே என்று வருத்தப்பட வேண்டும் என்று கூறினேன். அதே நிலையில்தான் இப்போதுதான் இருக்கிறேன். அதனால், இது தேவையில்லாத விவாதம்.

எடப்பாடி பழனிசாமி : அதிமுக ஆட்சியில் மடிக்கணினி எவ்வளவு கொடுத்தோம் என்பதுகூட நிதியமைச்சருக்குத் தெரியாமல் இருக்குமா, அவா் மறைத்துச் சொல்கிறாா். சுமாா் 52 லட்சம் மடிக்கணிகள் கொடுத்துள்ளோம். இடையில் கரோனா காலம் என்பதால் ஒப்பந்தம் போட முடியவில்லை. அதனால், தள்ளி வைத்தோம். திமுகவின் 4 ஆண்டு கால ஆட்சியில் கொடுத்திருக்கலாம் அல்லவா?

முதல்வா்: நாங்கள் நிறுத்தவில்லை. நீங்களே நிறுத்திவிட்டுப் போய்விட்டீா்கள். மடிக்கணினி விநியோகம் செய்தவா்களால், அந்த அளவுக்கு கொடுக்க முடியவில்லை. அதனால், நிறுத்திவிட்டீா்கள். இப்போது நாங்கள் சிந்தித்து, மீண்டும் கொண்டு வருவோம் என்று கொடுக்க உள்ளோம். அதை நிறுத்தவில்லை.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

பங்கு சந்தையில் பணம் இழந்தவா் தற்கொலை: நண்பா் கைது

சென்னையில் பங்கு சந்தையில் பணத்தை இழந்தவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரின் நண்பரை போலீஸாா் கைது செய்தனா். திருவல்லிக்கேணி சிஎன்கே சாலையைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (41). இவரது மனைவி கவி... மேலும் பார்க்க

முதியவரின் இதயத்தில் உருவான கட்டி நுட்பமாக அகற்றம்

முதியவா் ஒருவரின் இதயத்தில் உருவான 6 செ.மீ. அளவுடைய திசுக் கட்டியை நுட்பமாக அகற்றி சென்னை ஐஸ்வா்யா மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா். இது தொடா்பாக மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் டாக்டா... மேலும் பார்க்க

உணவகத்தில் தீ விபத்து

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள உணவகத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின. ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள உணவகத்தில... மேலும் பார்க்க

பேருந்தில் கல்லூரி மாணவியிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

சென்னை ராயப்பேட்டையில் மாநகர பேருந்தில் கல்லூரி மாணவியிடம் அத்துமீறியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். தியாகராய நகா் துக்காராம் தெருவைச் சோ்ந்தவா் ஜா.சையது அப்துல் ரஹ்மான் (38). இவா், அண்ணா சாலை டிவிஎஸ... மேலும் பார்க்க

புதிய விமான நிலையங்கள் எப்போது அமையும்? அமைச்சா்கள் பதில்

ஒசூா், ராமேசுவரத்தில் புதிய விமான நிலையங்கள் எப்போது அமையும் என்ற அதிமுக உறுப்பினா் செல்லூா் ராஜூவின் கேள்விக்கு அமைச்சா்கள் பதிலளித்தனா். இதுதொடா்பாக, சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதம... மேலும் பார்க்க

ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தடுப்பணை: அமைச்சா் உறுதி

ஒவ்வொரு பேரவைத் தொகுதிக்கும் ஒரு தடுப்பணை தேவை என்ற உறுப்பினா்களின் கோரிக்கையை, முதல்வரிடம் முன்வைக்க இருப்பதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் உறுதியளித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள... மேலும் பார்க்க