செய்திகள் :

விஜய் அகந்தையுடன் பேசுகிறார்; அவருக்குப் பின்னால் பாஜக இருக்கிறது: அப்பாவு

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அகந்தையுடன் பேசுவதாகவும் அவருக்குப் பின்னால் பாஜக இருப்பதாகவும் பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்ளுடன் பேசி அவர்,

"தவெக தலைவர் விஜய்க்கு கொஞ்சம் அகந்தை அதிகமாக இருக்கிறது. ஒரு நடிகர் கட்சி தொடங்கியிருக்கிறார். அவர் சினிமால பேசுவது போல பேசுகிறார்.

முதல்வரை மிரட்டும் தொனியில் பேசுவதில் இருந்தே விஜய்க்கு பின்னால் பாஜக இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

அரசியல் அடிச்சுவடு பற்றி இன்னும் அவருக்குத் தெரியவில்லை. அமித் ஷா, மோடி என மரியாதையின்றி குறிப்பிடுகிறார். பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர் என ஒவ்வொருவருக்கான விதிகள், நெறிமுறைகள் வெவ்வேறு.

மத்திய அரசே சிலரை கட்சி தொடங்கவைத்து ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். விஜய் போன்றவர்கள் கண்ணியக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்" என்று பேசியுள்ளார்.

TN Assembly speaker Appavu says that TVK Leader Vijay speaks arrogantly; BJP is behind him: Appavu

இதையும் படிக்க | சென்னை ஜிஎஸ்டி அலுவலகம், வானிலை ஆய்வு மையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நீலகிரி உள்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,... மேலும் பார்க்க

நெல்லை மாநகருக்குள் கனரக வாகனங்களுக்குக் கட்டுப்பாடு

நெல்லை மாநகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் இன்று முதல் கனரக வாகனங்கள் நுழைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.நெல்லை மாநகரத்தில் கனரக வாகனங்களுக்கான தடை அத்தியாவசிய தேவையாக மக்கள் கருது... மேலும் பார்க்க

நடிகை ராதிகா தாய் கீதா காலமானார்: முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி!

சென்னை: மறைந்த நடிகர் எம்.ஆர். ராதாவின் மனைவியும் நடிகை ராதிகாவின் தாயாருமான கீதா ராதா (86) உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.அவரது உடல், இறுதி மரியாதை செலுத்துவதற்காக போயஸ் ... மேலும் பார்க்க

செப். 25ல் சென்னையில் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' விழா!

தமிழக அரசு கல்வியில் செய்த சாதனைகள் குறித்த 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற கொண்டாட்ட விழா வருகிற செப். 25 ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசின் ஊடகச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் தகவல் தெரிவித்துள்ளார்... மேலும் பார்க்க

நெய் விலை குறைப்பு; ஆனால், தள்ளுபடி ரத்து! மற்றவை விலை குறையாதா? ஆவின் அமைதி!

ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து ஆவின் நிறுவனத்தின் பால் பொருள்களின் விலை திங்கள்கிழமை குறைக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் 5%, 18% என்ற இரு அடுக்குகளில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இன்று முத... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்புக்கு பிறகும் ஆவின் விலை குறைக்கபடாதது ஏன்?

ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்த பிறகும் ஆவின் பொருள்களின் விலையை தமிழக அரசு குறைக்காதது குறித்து கேள்வி எழுந்துள்ளது.நாடு முழுவதும் 5%, 18% ஆகிய இரு விகித சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இன்று மு... மேலும் பார்க்க