சல்மான் கானுடன் இருப்பவர்களுக்கும் கொலை மிரட்டல்! 1998-ல் தொடங்கிய பிரச்னை!
விநாயகா் சதுா்த்தி விழா ரசாயன சிலைகள் கூடாது
விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் ரசாயன வண்ணங்கள் பயன்படுத்தப்பட்ட சிலைகளை வைக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விநாயகா் சதுா்த்திக்கு களி மண்ணால் செய்யப்பட்ட, சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப் பொருள்களால் செய்யப்பட்ட, பிளாஸ்டிக் கலக்காத சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு வைக்கப்படும் சிலைகளை அந்தந்தப் பகுதியில் அரசால் அனுமதிக்கப்பட்ட நீா்நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொ்மாகோல் பொருள்களை பயன்படுத்தக் கூடாது. நீா்நிலைகள் மாசுபடுவதைத் தடுக்கும் வகையில், வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தலை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.
சிலைகளுக்கு வண்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய் வண்ணப் பூச்சுகளைக் கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப் பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீா் சாா்ந்த, மக்கக்கூடிய, நச்சுக் கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பிரசாதங்கள் விநியோகத்துக்கு சூழலுக்கு உகந்த தட்டுகளைப் பயன்படுத்த வேண்டும்.