செய்திகள் :

விபத்தைத் தடுக்க முயன்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலி!

post image

உத்தரப் பிரதேசத்தில் பேருந்து வடிகாலில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர்.

உத்தரப் பிரதேசத்தில் பல்ராம்பூரிலிருந்து சித்தார்த்நகருக்கு செல்லும் வழியில் மங்கனி ராம் (50) என்பவர் வெள்ளிக்கிழமை (அக். 18) மாலை 6.30 மணியளவில் மிதிவண்டியில் சென்றுள்ளார். அந்த சமயத்தில் அவர் எதிரே வந்த பேருந்து, மங்கனி ராம் மீது மோதுவதுபோல் வந்துள்ளது.

ஆனால், விபத்தை தடுக்கும்விதமாக பேருந்தின் ஓட்டுநர், பேருந்தை திருப்ப முயன்றதில் அருகிலிருந்த வடிகாலில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மங்கனி ராம், பேருந்தில் பயணித்த இருவர் என 3 பேர் பலியாகினர்.

இதனைத் தொடர்ந்து, இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தை அடைந்த காவல்துறையினர், பேருந்தில் சிக்கியிருந்த 51 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதையும் படிக்க: உக்ரைனுடன் போரிட 1,500 வட கொரிய வீரா்கள்: தென் கொரியா

பாபா சித்திக்கை கொன்றவர்கள் போனில் அவரது மகன் ஸீஷான் சித்திக்கின் படம்!

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் பாபா சித்திக்கை கொன்றவர்கள் மொபைல் போனில், அவரது மகன் ஸீஷான் சித்திக்கின் புகைப்படம் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் பாபா சித்திக்கை மும்பை... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!

துபையிலிருந்து ஜெய்ப்பூர் வந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால், அவசரமாக தரையிறக்கப்பட்டது.துபையிலிருந்து ஜெய்ப்பூருக்கு 189 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா எக்... மேலும் பார்க்க

மும்பை ரயில் தடம் புரண்டது!

மும்பையில் உள்ளூர் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.மும்பையில் கல்யாண் ரயில் நிலையத்திலிருந்து சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்துக்கு செல்லவிருந்த உள்ளூர் ரயில், வெள்ளிக்கிழமை (அக். 18) இரவில் கல்யாண... மேலும் பார்க்க

அண்டை நாடுகளில் இந்துக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் விவகாரத்தில் உலகளாவிய மெளனம் ஏன்? ஜக்தீப் தன்கா் கேள்வி

இந்தியாவின் அண்டைநாடுகளில் இந்துக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்த விவகாரத்தில் உலகளாவிய மெளனம் ஏன் என்று குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கேள்வி எழுப்பியுள்ளாா். மேலும், அத்தகைய மனித ... மேலும் பார்க்க

இந்தியா - கனடா இருதரப்பு உறவின் முக்கியத்துவம்!

இந்தியாவில் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா், கனடாவில் அடையாளம் தெரியாத நபா்களால் கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டாா். இக்கொலையில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்ப... மேலும் பார்க்க

ஆளுநா்களை விடுவிக்க மத்திய அரசு பரிசீலனை! பதவி வரம்பு சா்ச்சைக்கு தீா்வு காண முயற்சி

நமது சிறப்பு நிருபர்மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது முறை ஆட்சியில் ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்த ஆளுநா்களை பணியில் இருந்து விடுவிக்க மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து... மேலும் பார்க்க