செய்திகள் :

விராட் கோலிக்கு ஐசிசி சிறப்பு சலுகை? கேள்வி எழுப்பும் முன்னாள் வீரர்கள்!

post image

விராட் கோலிக்கு 20% அபராதம் போதுமானதில்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்திய, ஆஸி. மோதும் 4ஆவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று (டிச.26) தொடங்கியது. இதில் ஆஸி. 474 க்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 164/5 ரன்கள் எடுத்துள்ளது.

நேற்று ஆஸி. இளம் அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸை விராட் கோலி தேவையின்றி மோதியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கோலிக்கு 20 % அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு குறித்து ஆஸி. ஊடகங்கள் இந்திய வீரர் விராட் கோலியை கடுமையாக விமர்சித்துள்ளன.

இதேமாதிரியான சம்பவம் 2018இல் நடைபெற்றது. அதில் வேறுமாதிரியான தண்டனை வழங்கப்பட்டது.

2018இல் ஸ்டீவ் ஸ்மித்தினை விக்கெட் எடுத்து ஆக்ரோஷமாக கொண்டாடிய ககிச்சோ ரபாடா ஸ்மித்தை இடிப்பார். அதற்காக அவருக்கு 50 சதவிகிதம் 3 அபராத புள்ளியும் வழங்கப்பட்டது. அதனால் அவர் 2 போட்டிகளில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐசிசியின் பாரபட்சம்?

ஐசிசி விராட் கோலிக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. ஐசிசியின் புதிய தலைவராக பிசிசிஐ முன்னாள் செயலர் ஜெய் ஷா டிச.1ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விராட் கோலிக்கு 20% மட்டும் அபராதம் விதிக்கப்பட்டது குறித்து ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியதாவது:

என்னைப் பொருத்தவரையில் விராட் கோலிக்கு விதிக்கப்பட்ட தண்டனை மிகவும் கடுமையானது இல்லை. இதேபோல் இதற்கு முன்பு நடந்த சம்பவங்களுக்கு 15-25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், நேற்று நடந்ததின் தீவிரத்தன்மை குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.

உலகத்திலேயே அதிகமான பார்வையாளர்கள் பார்க்கும் கிரிக்கெட் போட்டி. இதேமாதிரி வார இறுதியில் நடந்திருந்தால் யோசித்து பாருங்கள்? இதெல்லாம் சரியென பலரும் நினைக்கக்கூடும்.

20% அபராதம் போதுமானதில்லை

துரதிஷ்டவசமாக இதை விராட் கோலி போன்ற மூத்த வீரர் செய்வது ஏற்கத்தக்கதல்ல. சில நேரங்களில் அது மற்ற வீரர்களுக்கு வேறு மாதிரியான தண்டனையாக வழங்கப்படுகிறது. கோலி பலருக்கும் ரோல் மாடல். அவரைப் பார்த்து கிரிக்கெட் விளையாட பலர் நினைக்கிறார்கள். அதனால் இந்த 20% அபராதம் போதுமானதாக நினைக்கவில்லை என்றார்.

டபிள்யூடபிள்யூஓஎஸ் கான்ஸ்டாஸுடனான தேவையற்ற மோதலில் கோலி தடைசெய்யப்படுவதிலிருந்து தப்பித்துவிட்டார் எனக் குறிப்பிட்டு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ஸ்டீவ் வாக்கும் இதே கருத்தினை முன்வைத்துள்ளார்.

முன்னாள் ஆஸி. வீரர் கில்கிறிஸ்ட், இந்தியாவின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்பட பலரும் கோலியின் செய்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

இரட்டை சதம் விளாசி சாதனை படைத்த ஆப்கானிஸ்தான் வீரர்!

ஆப்கானிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்ச ரன்கள் குவித்த வீரராக மாறி ரஹ்மத் ஷா சாதனை படைத்துள்ளார்.ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும... மேலும் பார்க்க

வளர்ந்து வரும் வீரர், வீராங்கனைகள் விருதுக்கான போட்டியாளர்களை அறிவித்த ஐசிசி!

இந்த ஆண்டின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர், வீராங்கனைகள் விருதுக்கான போட்டியாளர்களை ஐசிசி இன்று (டிசம்பர் 28) வெளியிட்டுள்ளது.இந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட வீரர், வீராங்கனைகளிலிருந்து வளர்... மேலும் பார்க்க

சதம் விளாசிய நிதீஷ் ரெட்டிக்கு பரிசுத் தொகை அறிவித்த ஆந்திர கிரிக்கெட் வாரியம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய நிதீஷ் ரெட்டிக்கு ஆந்திர கிரிக்கெட் வாரியம் பரிசுத் தொகை அறிவித்துள்ளது.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே ட... மேலும் பார்க்க

பாக்ஸிங் டே டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும்; வேகப் பந்துவீச்சாளர் நம்பிக்கை!

பாக்ஸிங் டே டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் என நம்பிக்கை இருப்பதாக அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலாண்ட் தெரிவித்துள்ளார்.இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி ந... மேலும் பார்க்க

“நினைவில் நிற்கும்...” நிதீஷ் குமார் ரெட்டிக்கு சச்சின் டெண்டுல்கர் புகழாரம்!

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட இளம் வீரர் நிதீஷ் குமார் ரெட்டியை சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங... மேலும் பார்க்க

நம்பமுடியாத சதம்... நிதீஷ் ரெட்டியை பாராட்டிய வாஷிங்டன் சுந்தர்!

நிதீஷ் ரெட்டியின் சதம் நம்பமுடியாததாக இருந்ததாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்... மேலும் பார்க்க