விராட் கோலிக்கு நமது ஆதரவு தேவையில்லை, நமக்குதான் அவரது ஆதரவு தேவை: ஜஸ்பிரித் பும்ரா
விராட் கோலிக்கு நமது ஆதரவு தேவையில்லை எனவும் , நமக்குதான் அவரது ஆதரவு தேவை எனவும் இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதையும் படிக்க: வாஷிங்டன் சுந்தரை ஏலத்தில் எடுத்த குஜராத் டைட்டன்ஸ்!
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்த விராட் கோலி, இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசி அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் 30-வது சதம் இதுவாகும்.
விராட் கோலி ஆதரவு தேவை
பெர்த் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்ற பிறகு, விராட் கோலிக்கு நமது ஆதரவு தேவையில்லை எனவும் , நமக்குதான் அவரது ஆதரவு தேவை எனவும் இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். விராட் கோலிக்கு நமது ஆதரவு தேவையில்லை. ஆனால், அவரது ஆதரவு நமக்குத் தேவை. அவர் மிகுந்த அனுபவம் வாய்ந்த வீரர். ஆஸ்திரேலியாவுக்கு விராட் கோலியின் 5-வது முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறார் என நினைக்கிறேன். அதனால், அவருக்கு ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் குறித்து மற்ற வீரர்களைக் காட்டிலும் மிகவும் நன்றாக தெரிந்திருக்கும். அவர் மிகவும் சிறப்பாக விளையாடினார் என்றார்.