திருவேற்காடு: கோலடி ஆக்கிரமிப்பு; தற்கொலை செய்துகொண்ட தச்சு தொழிலாளி... போராட்டத...
விராட் கோலியை சீண்டி விடாதீர்கள்; ஆஸி. வீரர்களுக்கு ஷேன் வாட்சன் அறிவுரை!
பார்டர் - கவாஸ்கர் தொடரில் விராட் கோலியை ஆஸ்திரேலிய வீரர்கள் சீண்ட வேண்டாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் அறிவுரை கூறியுள்ளார்.
பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது.
கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பார்டர் - கவாஸ்கர் தொடரை வென்றது. மூன்றாவது முறையாக தொடர்ச்சியாக தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி உள்ளது.
இதையும் படிக்க: தக்கவைப்பு தொகையில் உடன்பாடின்றி வெளியேறினேனா? திட்டவட்டமாக மறுத்த ரிஷப் பந்த்!
ஷேன் வாட்சன் அறிவுரை
பார்டர் - கவாஸ்கர் தொடர் இன்னும் ஒரு சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில், பார்டர் - கவாஸ்கர் தொடரில் விராட் கோலியை ஆஸ்திரேலிய வீரர்கள் சீண்ட வேண்டாம் எனவும், அவரை சீண்டுவது அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வரும் எனவும் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பாட்காஸ்ட் ஒன்றில் அவர் பேசியதாவது: விராட் கோலி குறித்து எனக்கு ஒரு விஷயம் நன்றாக தெரியும். அவருக்குள் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு ஆட்டத்தின் தீவிரத்தை அதிகப்படுத்தும். அவர் சந்திக்கும் ஒவ்வொரு பந்திலும் அதன் தீவிரம் இருக்கும். ஆனால், சமீப காலமாக அவரது அந்த தீவிரமான ஆட்டம் மறைந்து வருகிறது. ஏனெனில், ஒவ்வொரு போட்டியிலும் அந்த தீவிரத்தன்மையை வெளிப்படுத்துவது மிகவும் கடினம். ஆஸ்திரேலிய அணி அவரை கண்டுகொள்ளாமல் தனியே விட்டுவிட வேண்டும். இல்லையெனில், அவர்கள் அதற்கான விலையை கொடுக்க நேரிடும் என்றார்.
இதையும் படிக்க:விராட் கோலி சாதனையை முறியடித்த பாபர் அசாம்; மீதமிருப்பது ரோஹித் சர்மா மட்டும்தான்!
2011 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 1,352 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 54.08 ஆக உள்ளது. அதில் 6 சதங்கள் மற்றும் 4 அரைசதங்கள் அடங்கும். ஆஸ்திரேலியாவில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 169 ஆக உள்ளது.