போக்குவரத்து இடையூறாக சாலைகளில் கட்டுமானப் பொருள்கள் குவிப்பு
ஜி20 மாநாடு: இந்தியாவுக்கு பிரேசில் அதிபர் பாராட்டு!
பிரேசிலில் ஜி20 மாநாடு நேற்று தொடங்கியது. 2 நாள்கள் நடைபெறும் மாநாட்டில், ஜி20 அமைப்பைச் சேர்ந்த இந்தியா, கனடா, அமெரிக்கா, சீனா, ரஷியா, துருக்கி, சௌதி அரேபியா உள்ளிட்ட 20 நாடுகள் பங்கேற்கின்றன. இதையொட்டி, மேற்கண்ட நாடுகளின் தலைவர்கள் பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனேரோ நகருக்கு வருகை தந்துள்ளனர்.
ஜி20 மாநாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியும் பிரேசில் அதிபர் லூலாவும் இன்று(நவ. 19) சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது இந்தியாவை பிரேசில் அதிபர் பாராட்டி புக்ழந்துள்ளார்.பிரேசில் அதிபர் லூலா பேசியதாவது, “இந்த ஜி20 மாநாட்டில் பிரேசில் பல விஷயங்களை முயற்சித்துள்ளது. இவையனைத்தும் இந்தியாவில் ஜி20 மாநாடு நடத்தப்பட்டதிலிருந்து கிடைத்த உத்வேகம்தான். இந்தியா மாநாட்டை நடத்திய அளவுக்கு பிரேசிலும் அதே நிலையை அடைய விரும்புகிறது” என்றார்.