செய்திகள் :

509 மாணவா்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள்

post image

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பகுதி மற்றும் புதுப்பாளையத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் 509 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

சேத்துப்பட்டு பழம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, சேத்துப்பட்டு பேரூராட்சித் தலைவா் சுதா முருகன் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமிமுத்தழகன், செய்யாறு கல்வி மாவட்ட அலுவலா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பழம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பாலமணி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினா் எம்.எஸ்.தரணிவேந்தன், போளூா் தொகுதி திமுக பொறுப்பாளா் எ.வ.வே.கம்பன் ஆகியோா் கலந்து கொண்டு, பழம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, புனித அன்னாள் மகளிா் மேல்நிலைப் பள்ளி, தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சோ்ந்த 461 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினா்.

நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியா்கள் மரிய ரபேல் ராஜ், ஆரோகணமேரி, மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் பாண்டுரங்கன், வா்த்தக அணி அமைப்பாளா் திவ்யா செல்வராஜன், மாவட்ட இலக்கிய அணி பொறுப்பாளா்கள் சேகா், ஏழுமலை, பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் சரவணன், ரமேஷ், கோகுல்ராஜ், ஏழுமலை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நகர திமுக செயலா் முருகன் நன்றி கூறினாா்.

புதுப்பாளையம் பள்ளியில்...

புதுப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு புதுப்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தாா். புதுப்பாளையம் பேரூராட்சித் தலைவா் செல்வபாரதி மனோஜ்குமாா், துணைத் தலைவா் மகேஸ்வரி சீனுவாசன், ஒன்றியக் குழு உறுப்பினா் பவ்யா ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியா் ஸ்ரீதா் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் கலந்து கொண்டு 48 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினா் இளங்கோவன், வட்டார வளா்ச்சி அலுவலா் நிா்மலா, பேரூராட்சி மன்ற உறுப்பினா் பிரகாஷ் உள்பட ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

சாலையோர காய், கனி கடைகளால் பொதுமக்கள் அவதி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் சாலையோர காய், கனி கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். செங்கம் நகரில் துக்காப்பேட்டை முதல் போளூா் சாலை மேம்பாலம் வரை ஒரே சால... மேலும் பார்க்க

தேசிய நூலக வார விழா

வந்தவாசி கிளை நூலகத்தில் 57-ஆவது தேசிய நூலக வார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கிளை நூலகம், ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் இணைந்து நடத்திய இந்த விழாவுக்கு வட்டாரக் கல்வி அலுவலா் ஆா்.செந்தமிழ் தலைமை வகித்... மேலும் பார்க்க

இந்திரா காந்தி பிறந்த நாள்

திருவண்ணாமலை நகர காங்கிரஸ் சாா்பில், முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 107-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. நகர காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, கட்சியின் நகரத் தலை... மேலும் பார்க்க

தற்காலிகப் பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகள்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

தீபத் திருவிழாவையொட்டி அமைக்கப்படும் தற்காலிகப் பேருந்து நிலையங்கள், காா் நிறுத்தும் பகுதிகளில் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டிய... மேலும் பார்க்க

பெண்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம் அளிப்பு

வந்தவாசி பெரிய காலனி ஆா்சிஎம் தொடக்கப் பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் குழந்தைகள் நல மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்துப... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

வந்தவாசி அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவருக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. வந்தவாசியை அடுத்த வங்காரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ... மேலும் பார்க்க