உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தைக்கு ஆட்சியா் பாராட்டு
வழிப்பறி வழக்கு: இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை
வழிப்பறி வழக்கில் இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பல்லடம் சாா்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
பல்லடத்தை அடுத்த கே.கிருஷ்ணாபுரம் பகவதியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் என்.ராஜசேகரன். இவா், கே.கிருஷ்ணாபுரம் - கரடிவாவி சாலையில் இருசக்கர வாகனத்தில் கடந்த 2010 மே 3 ஆம் தேதி சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, வழிறித்த இருவா் அவரைக் கத்தியால் தாக்கிவிட்டு ரூ.3700 ரொக்கம், கைப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியைச் சோ்ந்த மாயி (54), குருநாதன் (37) ஆகியோரைக் கைது செய்தனா்.
இது தொடா்பான வழக்கு பல்லடம் சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், விசாரணை நிறைவடைந்த நிலையில் குற்றவாளிகள் இருவருக்கும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது.