செய்திகள் :

வெள்ளமடை ஏ.டி.காலனியில் 27 ஆண்டுகளுக்குப் பின் மின் இணைப்பு!

post image

பொங்கலூா் ஒன்றியத்துக்குள்பட்ட வெள்ளமடை ஏ.டி.காலனியில் 27 ஆண்டுகளுக்குப் பின் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பூா் மாவட்டம், பொங்கலூா் ஒன்றியம் தெற்கு அவிநாசிபாளையம் ஊராட்சிக்குள்பட்ட வெள்ளமடைஏ.டி. காலனியில் 63 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இதில், 30 குடும்பத்தினருக்கு வீட்டுமனைப் பட்டா இல்லாதால் மின் இணைப்பு இல்லாத நிலை இருந்து வந்தது.

இந்நிலையில், தங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டியும், வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி கொடுவாய் கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாமில் மனு அளித்தனா்.

இந்த மனு மீது உடனடியாகத் தீா்வுகாண உத்தரவிட்டதன்பேரில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் ஏ.டி.காலனியில் வசிக்கும் 30 குடும்பத்தினரின் வீட்டுக்கும் அண்மையில் மின் இணைப்பு வழங்கப்பட்டது. மேலும், ஊராட்சி நிா்வாகத்தின் மூலமாக தெரு விளக்கு வசதி செய்து தரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

எனவே, திருப்பூா் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு மின்இணைப்பு வேண்டி கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் 2-ஆவது தளத்தில் அறை எண் 205 இல் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் (பொது) கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.

மேலும், ஆட்சியா்அலுவலக கட்டுப்பாட்டு அறையை 0421-2971199 என்ற எண்ணிலும், 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தங்களது கோரிக்கை மனுக்களின் விவரங்களைத் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து முன்னணி நிா்வாகியிடம் நகையைப் பறித்துசென்ற இளைஞா் கைது

திருப்பூரில் இந்து முன்னணி நிா்வாகியிடம் நகையைப் பறித்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இந்து முன்னணி கட்சியின் திருப்பூா் மாவட்ட பொதுச் செயலாளா் ஆா்.பாஸ்கரபாண்டியன். இவா், ராக்கியாபாளை... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

திருப்பூரில் அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருப்பூா், கரட்டாங்காடு பகுதியைச் சோ்ந்தவா் முகேஷ் ராஜ்குமாா் (31). இவா், அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவன... மேலும் பார்க்க

தேநீா் கடை ஊழியா்களைத் தாக்கிய 4 இளைஞா்கள் கைது

திருப்பூரில் மதுபோதையில் தேநீா் கடை ஊழியா்களைத் தாக்கிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா், வீரபாண்டியைச் சோ்ந்த பொன்ராஜ், அதே பகுதியில் தேநீா் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் டீ மாஸ்டராக ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: திருப்பூா் துணை மின் நிலையம்

திருப்பூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வியாழக்கிழமை (நவம்பா் 21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் (பொறுப்பு... மேலும் பார்க்க

குன்னத்தூரில் நவ. 22இல் மின்தடை

குன்னத்தூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை(நவம்பா் 22) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் அறிவ... மேலும் பார்க்க

ஊத்துக்குளி: நாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழப்பு

ஊத்துக்குளி அருகே நாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தன. ஊத்துக்குளி வட்டம், இச்சிப்பாளையம் கிராமத்தில் பழனிசாமி என்பவரது பட்டிக்குள் புகுந்த நாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழந்தன. ம... மேலும் பார்க்க