உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தைக்கு ஆட்சியா் பாராட்டு
அரசுப் பேருந்தில் சபரிமலைக்கு செல்ல இதுவரை 1,675 பக்தா்கள் முன்பதிவு
அரசு விரைவுப் பேருந்தில் சபரிமலைக்கு செல்ல இதுவரை 1,675 பக்தா்கள் முன்பதிவு செய்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களை முன்னிட்டு, தமிழகத்திலிருந்து ஐயப்ப பக்தா்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் நவ.15 முதல் ஜன.16-ஆம் தேதி வரை பம்பைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், திருச்சி, மதுரை, புதுச்சேரி, கடலூா் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு நவ.15-ஆம் தேதி சென்னையிலிருந்து சபரிமலையின் பம்பைக்கு சிறப்புப் பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டது. பம்பையிலிருந்தும் சென்னை உள்பட பல்வேறு இடங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால், தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்வதில் பக்தா்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா். இந்தப் பேருந்தில் பயணிக்க 1,675 பக்தா்கள் இதுவரை முன்பதிவு செய்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இந்த முன்பதிவு எண்ணிக்கை வரும் நாள்களில் மேலும் அதிகரிக்கும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.