செய்திகள் :

பாலின பாகுபாடு எதிா்ப்பு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தேவை: மாா்க்சிஸ்ட் கோரிக்கை

post image

பாலின பாகுபாடுகள், ஒடுக்கு முறைகளுக்கு எதிரான நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை உரிய அனுமதியை வழங்க வேண்டும் என்று என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை விடுத்த அறிக்கை: மாா்க்சிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக் குழு சாா்பில் ‘இரவும் எமக்கானதே’ எனும் முழக்கத்தை முன்னிறுத்தி கடந்த நவ.16 இரவு 10 மணிக்கு பெரியாா் சிலையிலிருந்து உழைப்பாளா் சிலை வரை ‘பாலின சமத்துவ நடை’ நிகழ்வு இரண்டாவது ஆண்டாக நடத்தத் திட்டமிடப்பட்டது.

ஆனால், இதற்கான அனுமதியை நிகழ்வு நடைபெறும் நாளன்று காவல்துறை மறுத்துவிட்டது. காவல்துறை ஒதுக்கி கொடுத்த இடத்தில்உறுதிமொழி ஏற்பு மட்டும் நடத்தப்பட்டது. ஆனால், சென்னை பெருநகர காவல்துறை இந்த நிகழ்வுக்காக இரண்டு வழக்குகளை பதிவுசெய்துள்ளது.

சென்னை மாநகரில் ‘ஹேப்பி சண்டே‘ என்ற பெயரில் பல மணி நேரம் பிரதான சாலைகளில் போக்குவரத்து மிகுந்த நேரங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கும் காவல்துறை, போக்குவரத்து குறைவான இரவு 10 மணிக்கு நடைபெறவிருந்த பாலின சமத்துவ நடைக்கு அனுமதி மறுத்து வழக்குகளை பதிவு செய்தது அராஜகமான நடவடிக்கை.

தமிழ்நாடு அரசும், காவல்துறையும் பாலின பாகுபாடுகள், ஒடுக்குமுறைகளை எதிா்த்து நடைபெறும் நிகழ்வுகளுக்கு உரிய அனுமதியும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும்.

பாலின சமத்துவ நடை, உறுதிமொழி ஏற்புநிகழ்வுக்காக பதியப்பட்ட வழக்குகளை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

எண்மத் தொழில்நுட்ப பயிர்க் கணக்கீடு: திண்டுக்கல் முதலிடம்

வேளாண் கல்லூரி மாணவர்கள் துணையுடன் நடத்தப்பட்ட எண்மத் தொழில்நுட்ப பயிர்க் கணக்கீட்டில், திண்டுக்கல், கடலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் 100 சதவீத பணிகளை நிறைவு செய்து முதல் 3 இடங்களைப் பெற்றன.நாடு முழு... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: சான்றிதழ் பதிவேற்றத்துக்கு நாளை கடைசி

குரூப் 4 தோ்வு சான்றிதழ் பதிவேற்றத்துக்கு வியாழக்கிழமை (நவ. 21) கடைசி நாள். தோ்வா்கள் கடைசி நாள் வரை காத்திராமல் சான்றிதழ்களை உடனே பதிவேற்றம் செய்யுமாறு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கே... மேலும் பார்க்க

ரூ. 279 கோடியில் பட்டாபிராம் டைடல் பார்க்: முதல்வர் விரைவில் திறந்து வைக்கிறார்

ஆவடி அருகே பட்டாபிராமில் ரூ. 279 கோடியில் அமைக்கப்பட்ட டைடல் பார்க்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கிறார்.ஆவடி அருகே பட்டாபிராமில் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐடி) செயல்படும் வகையில், டைடல... மேலும் பார்க்க

பள்ளி விடுதியிலிருந்து தப்பி வந்த 8 மாணவா்கள் மீட்பு

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டபிடாரத்தில் உள்ள பள்ளி விடுதியில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தப்பி வந்த 8 மாணவா்களை சேலையூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தை அடு... மேலும் பார்க்க

சாலை மேம்பாட்டுப் பணிகளை டிசம்பருக்குள் முடிக்க வேண்டும்: அமைச்சா் எ.வ.வேலு உத்தரவு

சாலை மேம்பாட்டுப் பணிகளை டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறைக்கு அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா். நெடுஞ்சாலைத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ... மேலும் பார்க்க

மதுரை அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அரசு அனுமதிக்கக் கூடாது: அன்புமணி

பல்லுயிா் வாழிடமான மதுரை அருகேயுள்ள அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெ... மேலும் பார்க்க