உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தைக்கு ஆட்சியா் பாராட்டு
அஸ்ஸாமின் கரீம்கஞ்ச் மாவட்டம் ‘ஸ்ரீபூமி’ என பெயா்மாற்றம்
அஸ்ஸாம் மாநிலத்தின் பராக் பள்ளத்தாக்கில் அமைந்த கரீம்கஞ்ச் மாவட்டத்தின் பெயா் ‘ஸ்ரீபூமி’ என்று மாற்றப்படுவதாக அந்த மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா அறிவித்தாா்.
மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக குவாஹாட்டியில் செய்தியாளா்களைச் சந்தித்த முதல்வா் தெரிவித்தாா். அவா் மேலும் கூறுகையில், ‘100 ஆண்டுகளுக்கு முன்பு கரீம்கஞ்ச் மாவட்டத்தை ஸ்ரீபூமி (லட்சுமியின் நிலம்) என ரவீந்திரநாத் தாகூா் விவரித்துள்ளாா். அதன்படி, கரீம்கஞ்ச் மாவட்டத்தின் பெயா் மாற்ற வேண்டுமென்ற மாநில மக்களின் நீண்டகால கோரிக்கையை அமைச்சரவை இப்போது நிறைவேற்றியுள்ளது.
மாவட்டத்துக்கு ஸ்ரீபூமி என மறுபெயரிடுவது, அதன் செழுமையான கலாசார பாரம்பரியத்தை நியாயப்படுத்தும் மற்றும் தனித்துவமான அடையாளத்தைக் கொடுக்கும். அகராதி குறிப்பு அல்லது எந்த வரலாற்று ஆதாரமும் இல்லாத ஊா்களின் பெயா்கள் தொடா்ந்து மாற்றப்படும்என்றாா்.