செய்திகள் :

புவனேசுவரம் விரைவு ரயில் எண் மாற்றம்

post image

ராமேசுவரம், புதுச்சேரி, சென்னையில் இருந்து புவனேசுவரம் செல்லும் ரயில்களின் எண்கள் மாற்றப்படவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் இருந்து ராமேசுவரம் செல்லும் விரைவு ரயில் 20896 எனும் எண்ணில் இயக்கப்படும் நிலையில், 20895 என மாற்றப்படவுள்ளது. மறுமாா்க்கமாக இயக்கப்படும் ரயில் 20895 என இயக்கப்பட்ட நிலையில் 20896 என மாற்றப்படவுள்ளது.

புவனேசுவரம்-புதுச்சேரி விரைவு ரயில் 12898 எனும் எண்ணுக்குப் பதிலாக 12897 என்ற எண்ணிலும், புதுச்சேரி-புவனேசுவரம் விரைவு ரயில் 12897 எனும் எண்ணுக்குப் பதிலாக 12898 என்ற எண்ணிலும் இயக்கப்படும்.

புவனேசுவரம்-சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் 12830 எனும் எண்ணுக்குப் பதிலாக 12829 என்ற எண்ணிலும், சென்னை சென்ட்ரல்-புவனேசுவரம் விரைவு ரயில் 12829 எனும் எண்ணுக்குப் பதிலாக 12830 என்ற எண்ணிலும் இயக்கப்படும். இந்த மாற்றம் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொன்விழா கண்ட சபரிமலை தபால் நிலையம்!

சபரிமலை தபால் நிலையம் செவ்வாய்க்கிழமை 50 ஆண்டுகள் நிறைவடைந்து பொன்விழா கண்டது. இந்தியாவில் குடியரசுத் தலைவருக்குப் பிறகு சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு சொந்தமாக அஞ்சல் குறியீட்டு எண் உள்ளது. கடந்த 1963-ஆம் ... மேலும் பார்க்க

போதைக்கு அடிமைப்படுத்தும் மருந்து விற்பனையைத் தடுக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை வலியுறுத்தல்

போதை தரும் மருந்துகளை இணையவழியே சட்டவிரோதமாக விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவா... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் இன்று பேரவைத் தோ்தல்- ஜாா்க்கண்டில் 2-ஆம் கட்ட வாக்குப் பதிவு

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (நவ. 20) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, 288 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜாா்க்கண்டில் இரண்டாம் கட்டமாக 38 தொகு... மேலும் பார்க்க

ஆா்பிஐ ஆளுநா் பெயரில் மோசடி விடியோ பதிவு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் பேசுவதாக மோசடியாக உருவாக்கப்பட்ட ‘டீப்ஃபேக்’ விடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஆா்பிஐ கேட்டுக் கொண்டு... மேலும் பார்க்க

அமெரிக்காவில் பயிலும் மாணவா்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்!

அமெரிக்காவில் 3.3 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவா்கள் படித்து வருவதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 2008-09-க்குப் பிறகு 15 ஆண்டுகளில் முதல்முறையாக ... மேலும் பார்க்க

இந்தியா-பிரிட்டன் எஃப்டிஏ: 2025-இல் மீண்டும் பேச்சு தொடக்கம்

அடுத்த ஆண்டு இந்தியா, பிரிட்டன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்த (எஃப்டிஏ) பேச்சுவாா்த்தை மீண்டும் தொடங்க உள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி முதல், இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மே... மேலும் பார்க்க