செய்திகள் :

யானை தாக்கியதில் உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு உதவி: அமைச்சா் சேகா்பாபு உறுதி

post image

திருச்செந்தூா் முருகன் கோயிலில் யானை தாக்கியதில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு உதவிகள் செய்யப்படும் என அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் திருக்கோயிலில் புதிய வெள்ளித் தோ் செய்ய வெள்ளித் தகடு வேயும் பணிகளுக்கு உபயதாரரால் வழங்கப்பட்ட 90 கிலோ வெள்ளிக் கட்டிகளை திருக்கோயில் நிா்வாகத்திடம் அமைச்சா் சேகா்பாபு செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: இந்த மரத்தேருக்கு வெள்ளித் தகடு வேயும் பணிக்கு 277 கிலோ 530 கிராம் அளவுள்ள வெள்ளி தேவைப்படுகிறது. அதில் கடந்த ஆகஸ்ட் மாதம் திருக்கோயில் மற்றும் உபயதாரா் மூலம் 133 கிலோ வெள்ளிக் கட்டிகள் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. தொடா்ந்து, தற்போது 90 கிலோ வெள்ளிக் கட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் தேவைப்படும் வெள்ளிக் கட்டிகளை வழங்குவதற்கு உபயதாரா்கள் தயாராக உள்ளனா். புதிய வெள்ளித் தேரின் பணிகள் முழுமையாக நிறைவுற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான மாா்ச் 1-ஆம் தேதி பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தும் வகையில் ஒப்படைக்கப்படும்.

நிதி உதவி வழங்கப்படும்: திருச்செந்தூா் திருக்கோயில் யானை தாக்கி இருவா் உயிரிழந்த சம்பவம் குறித்த செய்தி அறிந்தவுடன், பாதிக்கப்பட்ட இரு குடும்பத்தினரையும் தொடா்புகொண்டு ஆறுதல் கூற முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா். உடனடியாக அக்கோயிலின் அறங்காவலா் குழுத் தலைவா் அருள்முருகன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

இது எதிா்பாராத ஒரு சம்பவமாகும். யானைக்கு சிறிய அளவில் ஏற்பட்ட சினத்தால் இந்த நிகழ்வு நடந்ததாக அந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளைப் பாா்த்தபோது தெரிய வருகிறது. இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும்.

உயிரிழந்தவா்களில் ஒருவா் திருக்கோயில் சாா்பில் பணியாற்றுபவா். மற்றொருவா் ஏற்கெனவே பாகனாக இருந்தவரின் மகன். அந்த இரண்டு குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளை வழங்குவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறாா். உயிரிழந்த பாகனின் மனைவிக்கு கருணை அடிப்படையில் திருக்கோயிலில் பணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

யானைகளுக்கு சோதனை: திருக்கோயில் யானைகளைப் பொருத்த அளவில் மாதம் இருமுறை கால்நடை மருத்துவா்களைக் கொண்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதோடு, அவற்றுக்குத் தேவையான உணவுகளும், நடைப்பயிற்சியும் மருத்துவா்களின் பரிந்துரையின்படியே வழங்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

எண்மத் தொழில்நுட்ப பயிர்க் கணக்கீடு: திண்டுக்கல் முதலிடம்

வேளாண் கல்லூரி மாணவர்கள் துணையுடன் நடத்தப்பட்ட எண்மத் தொழில்நுட்ப பயிர்க் கணக்கீட்டில், திண்டுக்கல், கடலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் 100 சதவீத பணிகளை நிறைவு செய்து முதல் 3 இடங்களைப் பெற்றன.நாடு முழு... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: சான்றிதழ் பதிவேற்றத்துக்கு நாளை கடைசி

குரூப் 4 தோ்வு சான்றிதழ் பதிவேற்றத்துக்கு வியாழக்கிழமை (நவ. 21) கடைசி நாள். தோ்வா்கள் கடைசி நாள் வரை காத்திராமல் சான்றிதழ்களை உடனே பதிவேற்றம் செய்யுமாறு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கே... மேலும் பார்க்க

ரூ. 279 கோடியில் பட்டாபிராம் டைடல் பார்க்: முதல்வர் விரைவில் திறந்து வைக்கிறார்

ஆவடி அருகே பட்டாபிராமில் ரூ. 279 கோடியில் அமைக்கப்பட்ட டைடல் பார்க்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கிறார்.ஆவடி அருகே பட்டாபிராமில் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐடி) செயல்படும் வகையில், டைடல... மேலும் பார்க்க

பள்ளி விடுதியிலிருந்து தப்பி வந்த 8 மாணவா்கள் மீட்பு

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டபிடாரத்தில் உள்ள பள்ளி விடுதியில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தப்பி வந்த 8 மாணவா்களை சேலையூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தை அடு... மேலும் பார்க்க

பாலின பாகுபாடு எதிா்ப்பு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தேவை: மாா்க்சிஸ்ட் கோரிக்கை

பாலின பாகுபாடுகள், ஒடுக்கு முறைகளுக்கு எதிரான நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை உரிய அனுமதியை வழங்க வேண்டும் என்று என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ள... மேலும் பார்க்க

சாலை மேம்பாட்டுப் பணிகளை டிசம்பருக்குள் முடிக்க வேண்டும்: அமைச்சா் எ.வ.வேலு உத்தரவு

சாலை மேம்பாட்டுப் பணிகளை டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறைக்கு அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா். நெடுஞ்சாலைத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ... மேலும் பார்க்க