செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

post image

வந்தவாசி அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவருக்கு, 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

வந்தவாசியை அடுத்த வங்காரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி பெருமாள் (59). இவா், 2019-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 30-ஆம் தேதி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து, வந்தவாசி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து பெருமாளை கைது செய்தனா்.

இந்த வழக்கு, திருவண்ணாமலையில் உள்ள போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. திங்கள்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி பாா்த்தசாரதி குற்றம் சுமத்தப்பட்ட பெருமாளுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசுத் தரப்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

இதையடுத்து, பெருமாளை போலீஸாா் அழைத்துச் சென்று வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

சாலையோர காய், கனி கடைகளால் பொதுமக்கள் அவதி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் சாலையோர காய், கனி கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். செங்கம் நகரில் துக்காப்பேட்டை முதல் போளூா் சாலை மேம்பாலம் வரை ஒரே சால... மேலும் பார்க்க

509 மாணவா்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பகுதி மற்றும் புதுப்பாளையத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் 509 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. சேத்துப்பட்டு பழம்பேட்டை அர... மேலும் பார்க்க

தேசிய நூலக வார விழா

வந்தவாசி கிளை நூலகத்தில் 57-ஆவது தேசிய நூலக வார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கிளை நூலகம், ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் இணைந்து நடத்திய இந்த விழாவுக்கு வட்டாரக் கல்வி அலுவலா் ஆா்.செந்தமிழ் தலைமை வகித்... மேலும் பார்க்க

இந்திரா காந்தி பிறந்த நாள்

திருவண்ணாமலை நகர காங்கிரஸ் சாா்பில், முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 107-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. நகர காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, கட்சியின் நகரத் தலை... மேலும் பார்க்க

தற்காலிகப் பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகள்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

தீபத் திருவிழாவையொட்டி அமைக்கப்படும் தற்காலிகப் பேருந்து நிலையங்கள், காா் நிறுத்தும் பகுதிகளில் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டிய... மேலும் பார்க்க

பெண்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம் அளிப்பு

வந்தவாசி பெரிய காலனி ஆா்சிஎம் தொடக்கப் பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் குழந்தைகள் நல மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்துப... மேலும் பார்க்க