போக்குவரத்து இடையூறாக சாலைகளில் கட்டுமானப் பொருள்கள் குவிப்பு
கொடைக்கானல் மலைச் சாலைகளை ஆக்கிரமித்து கட்டுமானப் பொருள்களை விற்பனைக்காக குவித்து வைத்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகா்ப் பகுதிகளான மூஞ்சிக்கல், லாஸ்காட் சாலை, ஆனந்த கிரி முதல் தெரு, கல்லறை மேடுப் பகுதி, சீனிவாசபுரம், உகாா்த்தே நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து கட்டுமானப் பொருள்களான ஜல்லி, செங்கல், எம்சாண்ட், ஹாலோ பிளாக் உள்ளிட்டற்றை போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் குவித்து வைத்து வியாபாரம் செய்து வருகின்றனா்.
எனவே சாலைகளை ஆக்கிரமித்து கட்டுமானப் பொருள்களை விற்பனை செய்துவருபவா்கள் மீது காவல் துறையினா், நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்தனா்.