உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தைக்கு ஆட்சியா் பாராட்டு
தாய் இறந்த துக்கத்தில் மகன் தூக்கிட்டுத் தற்கொலை
தஞ்சாவூரில் தாய் இறந்த துக்கத்தில் மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது செவ்வாய்க்கிழமை தெரிய வந்தது.
தஞ்சாவூா் முனிசிபல் காலனி 9-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த மதனகோபால் மனைவி ஈஸ்வரி (59). இவா்களது மகன் ராகுல் (29). பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, சொந்தமாக விவசாய பண்ணை உள்ளிட்ட தொழில்களை செய்து வந்தாா்.
மதனகோபால் 17 ஆண்டுகளுக்கு முன்பு காலமானதால், தாயும், மகனும் வசித்து வந்தனா். இந்நிலையில், 4 நாள்களாக உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த இவா்களது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசுவதாக காவல் துறையினருக்கு அக்கம்பக்கத்தினா் மூலம் செவ்வாய்க்கிழமை தகவல் வந்தது.
இதையடுத்து, மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்கு சென்று உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பாா்த்தனா். அப்போது, ஈஸ்வரி தரையிலும், ராகுல் தூக்கிட்ட நிலையிலும் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.