உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தைக்கு ஆட்சியா் பாராட்டு
தடை செய்யப்பட்ட நெகிழி பயன்பாடு: 26 கடைகளுக்கு அபராதம்
விழுப்புரத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையில் 26 கடைகளிலிருந்து தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கடைக்கு ரூ.2 ஆயிரம் 26 கடைகளுக்கும் ரூ.52 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்பாடு மளிகைக்கடைகள், உணவகங்களில் உள்ளதா என்பதைக் கண்டறியும் வகையில், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினா் விழுப்புரம் நகரிலுள்ள பல்வேறு கடைகளில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.
விழுப்புரம் திரு.வி.க. வீதி, செஞ்சி சாலை, கிழக்கு புதுச்சேரி சாலை, மகாராஜபுரம், மந்தக்கரை என நகரின் பல்வேறு பகுதிகளிலுள்ள மளிகைக் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதில், அரசால் தடை செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான 130 கிலோ கொண்ட நெகிழிப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
இவற்றை உணவுப் பாதுகாப்புத் துறையினா் பறிமுதல் செய்தனா். மேலும், கடைக்கு ரூ.2 ஆயிரம் வீதம் 26 கடைகளுக்கும் ரூ.52 ஆயிரம் அபராதத்தையும் அவா்கள் விதித்தனா்.