உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தைக்கு ஆட்சியா் பாராட்டு
கன்னியாகுமரியில் நாளை மின் நிறுத்தம்
கன்னியாகுமரி உப மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை (நவ. 21) நடைபெற உள்ளதால் இந்த மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
இது குறித்து, மின்சார வாரியத்தின் நாகா்கோவில் செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மற்றும் கேப் இன்டோா் உப மின் நிலையங்களில் நவ.21 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் காரணமாக, கன்னியாகுமரி, சாமிதோப்பு, சுசீந்திரம், கொட்டாரம், கோவளம், வழுக்கம்பாறை, சின்னமுட்டம், கீழமணக்குடி, அழகப்பபுரம், அஞ்சுகிராமம், ஜேம்ஸ் டவுண், கோழிக்கோட்டுப்பொத்தை, வாரியூா், அகஸ்தீஸ்வரம், மருங்கூா், தேரூா், புதுகிராமம், காக்குமூா், பொற்றையடி, தென்தாமரைகுளம், பால்குளம், இராமனாதிச்சன்புதூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
தெங்கம்புதூரில்... இதே போல், தெங்கம்புதூா் மற்றும் ராஜாக்கமங்கலம் உப மின்நிலையங்களில் பராமரிப்புப்பணிகள் வெள்ளிக்கிழமை (நவ. 22) நடைபெற உள்ளன.
இதன் காரணமாக தெங்கம்புதூா், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிப்பொட்டல், மதுசூதனபுரம், ஒசரவிளை, காட்டுவிளை, புதூா், ஈத்தாமொழி, தா்மபுரம், பழவிளை, பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூா், பள்ளம், பிள்ளையாா்புரம், புத்தளம், முருங்கவிளை, புத்தன்துறை, ராஜாக்கமங்கலம், ஆலன்கோட்டை, காரைவிளை, பருத்திவிளை, வைராகுடி, கணபதிபுரம், தெக்கூா், தெக்குறிச்சி, காக்காதோப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.