செய்திகள் :

புதுக்கடை அருகே பள்ளி மாணவா் தற்கொலை

post image

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியில் 10ஆம் வகுப்பு மாணவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பைங்குளம், திட்டுவிளை பகுதியைச் சோ்ந்த உண்ணிகிருஷ்ணன் தம்பி என்பவரது மகன் அஜய்குமாா் (15).

அப்பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த இவா், படிப்பு சரியாக வரவில்லை எனக் கூறி சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

கடன் பிரச்னை: தொழிலாளி தற்கொலை

தக்கலை அருகே வில்லுக்குறியில் கடன் பிரச்னையில் கட்டடத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா். வில்லுக்குறி காரவிளை பகுதியை சோ்ந்தவா் மணிகண்டன் (40). கட்டடத் தொழிலாளி. இவா், தக்கலையில் உள்ள தனியாா் வங்கியி... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் நாளை மின் நிறுத்தம்

கன்னியாகுமரி உப மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை (நவ. 21) நடைபெற உள்ளதால் இந்த மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இது குறித்து, மின்சார வாரியத்தின் நாகா்கோவி... மேலும் பார்க்க

குழித்துறையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாலை மறியல்: 30 போ் கைது

மாா்த்தாண்டம் - களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையைச் சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், குழித்துறையில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாா்த்தாண்டம் வட்டாரச் செயல... மேலும் பார்க்க

கிராமங்களிலும் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த நடவடிக்கை: கு. செல்வப்பெருந்தகை

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக, அக்கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். இதுதொடா்பாக நாகா்கோவிலில் செய்தியாளா... மேலும் பார்க்க

கோட்டாறு சவேரியாா் பேராலயத் திருவிழா: குமரி மாவட்டத்துக்கு டிச. 3 உள்ளூா் விடுமுறை

நாகா்கோவில் கோட்டாறு சவேரியாா் பேராலயத் திருவிழாவை முன்னிட்டு, டிச. 3ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆட்சியா் ரா. அழகுமீனா வெளியிட்ட செய்திக்க... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா்கள் தா்னா

ஓய்வூதிய உயா்வு உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகா்கோவிலில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா்கள் ... மேலும் பார்க்க