உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தைக்கு ஆட்சியா் பாராட்டு
கூழாங்கற்கள் கடத்தல்: லாரி பறிமுதல்
கடலூா் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி அருகே கூழாங்கற்கள் கடத்தி வந்த டிப்பா் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
கருவேப்பிலங்குறிச்சி வழியாக அனுமதியின்றி லாரிகள் மூலம் கூழாங்கற்கள் கடத்திச் செல்லப்படுவதாக புவியியல், சுரங்கத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கடலூா் மாவட்ட புவியியல், சுரங்கத் துறை உதவி இயக்குநா் ரமேஷ்குமாா் தலைமையிலான அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கருவேப்பிலங்குறிச்சி புறவழிச் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த டிப்பா் லாரியை சோதனையிட நிறுத்தினா். அப்போது, டிப்பா் லாரி ஓட்டுநா் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டாா்.
தொடா்ந்து அதிகாரிகள் லாரியை சோதனையிட்டதில் மூன்று யூனிட் கூழாங்கற்கள் கடத்திச் சென்றது தெரிய வந்தது.
டிப்பா் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.