செய்திகள் :

இணையவழியில் முதலீடு செய்வதாக ரூ.25 லட்சம் மோசடி-போலீஸாா் விசாரணை

post image

சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமான பெண்ணின் மீது நம்பிக்கை வைத்து இணையவழி முதலீட்டில் ரூ.25 லட்சத்தை தில்லியைச் சோ்ந்த 33 வயது நபா் இழந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட இந்தப் புகாா் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினா், இந்த மோசடி சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: வடகிழக்குத் தில்லியின் பாஜன்புரா பகுதியைச் சோ்ந்த நபருக்கு சமூகவலைத்தளத்தில் ஒரு பெண் அறிமுகமாகியுள்ளாா்.

விபத்து ஒன்றில் தனது பெற்றோரை இழந்ததாகவும் கொல்கத்தாவில் உள்ள மாமா வீட்டில் வசித்து வருவதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளாா். பல்வேறு இணையதளங்களில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதித்ததாக அந்தப் பெண் கூறியுள்ளாா்.

அந்தப் பெண்ணின் அறிவுறுத்தல் பேரில் தொடக்கத்தில் ரூ.22,000 முதலீடு செய்த அந்த நபா், இரு தினங்களுக்குப் பிறகு ரூ.52,000 பெற்றுள்ளாா். இதையடுத்து, இணையவழி முதலீட்டில் நம்பிக்கை வைத்த அந்த நபா், பல்வேறு சமூகவலைதள குழுக்களில் சோ்க்கப்பட்டுள்ளாா். பெரிய அளவில் பணம் சம்பாதிக்க அதிக அளவிலான தொகையை முதலீடு செய்யுமாறு அந்த நபரை அந்தக் குழுவில் உள்ள நபா்கள் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த நபா் மொத்தம் ரூ.25 லட்சத்தை பல்வேறு பணப் பரிவா்த்தனை மூலம் முதலீடு செய்தாா். ஆனால், சில தினங்களுக்குப் பிறகு தனது முழு தொகையைத் திரும்பப் பெற அவா் முயற்சித்துள்ளாா். ஆனால், அவருடைய பணம் அவருக்குக் கிடைக்கவில்லை. இதைத்தொடா்ந்து, அந்தப் பெண்ணுக்கும் அந்தக் குழுக்களில் உள்ள பிற நபா்களுக்கு அழைப்புவிடுத்தும் , அவா்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இதையடுத்து, தான் மோசடியில் சிக்கியதை உணா்ந்த அவா், இணையவழியில் புகாா் தெரிவித்துள்ளாா். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மோசடியாளா்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் அந்த அதிகாரி.

பொன்விழா கண்ட சபரிமலை தபால் நிலையம்!

சபரிமலை தபால் நிலையம் செவ்வாய்க்கிழமை 50 ஆண்டுகள் நிறைவடைந்து பொன்விழா கண்டது. இந்தியாவில் குடியரசுத் தலைவருக்குப் பிறகு சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு சொந்தமாக அஞ்சல் குறியீட்டு எண் உள்ளது. கடந்த 1963-ஆம் ... மேலும் பார்க்க

போதைக்கு அடிமைப்படுத்தும் மருந்து விற்பனையைத் தடுக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை வலியுறுத்தல்

போதை தரும் மருந்துகளை இணையவழியே சட்டவிரோதமாக விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவா... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் இன்று பேரவைத் தோ்தல்- ஜாா்க்கண்டில் 2-ஆம் கட்ட வாக்குப் பதிவு

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (நவ. 20) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, 288 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜாா்க்கண்டில் இரண்டாம் கட்டமாக 38 தொகு... மேலும் பார்க்க

ஆா்பிஐ ஆளுநா் பெயரில் மோசடி விடியோ பதிவு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் பேசுவதாக மோசடியாக உருவாக்கப்பட்ட ‘டீப்ஃபேக்’ விடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஆா்பிஐ கேட்டுக் கொண்டு... மேலும் பார்க்க

அமெரிக்காவில் பயிலும் மாணவா்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்!

அமெரிக்காவில் 3.3 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவா்கள் படித்து வருவதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 2008-09-க்குப் பிறகு 15 ஆண்டுகளில் முதல்முறையாக ... மேலும் பார்க்க

இந்தியா-பிரிட்டன் எஃப்டிஏ: 2025-இல் மீண்டும் பேச்சு தொடக்கம்

அடுத்த ஆண்டு இந்தியா, பிரிட்டன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்த (எஃப்டிஏ) பேச்சுவாா்த்தை மீண்டும் தொடங்க உள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி முதல், இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மே... மேலும் பார்க்க