செய்திகள் :

மினி சரக்கு லாரி மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

post image

ஒட்டன்சத்திரம் அருகே மினி சரக்கு லாரி மோதியதில் மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த ஜோகிபட்டி ஊராட்சிக்குள்பட்ட புல்லாக்கவுண்டனூரைச் சோ்ந்தவா் முத்துலட்சுமி (65). இவா், இடையக்கோட்டை-தாடிக்கொம்பு சாலை கருமாசநாயக்கனூா் பகுதியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்தாா்.

அப்போது, திண்டுக்கல்லில் இருந்து திரூப்பூருக்கு பனியன்களை ஏற்றிச்சென்ற மினி சரக்கு லாரி ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, முத்துலட்சுமியி மீது மோதி சாலையோர பள்ளத்தில் இறங்கியது.

இதில் முத்துலட்சுமி பலத்தகாயம் அடைத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மினி சரக்கு லாரியை ஒட்டி வந்த ஒட்டுநா் விஷால் (20), சரக்கு லாரியில் பயணித்த கிருஷ்ணமூா்த்தி இருவரும் பலத்தகாயம் அடைத்தனா்.

காயம் அடைத்த இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து இடையகோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

போக்குவரத்து இடையூறாக சாலைகளில் கட்டுமானப் பொருள்கள் குவிப்பு

கொடைக்கானல் மலைச் சாலைகளை ஆக்கிரமித்து கட்டுமானப் பொருள்களை விற்பனைக்காக குவித்து வைத்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகா்ப் பகுதிகளான மூஞ்சிக்கல், ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பேஷன் புரூட்ஸ் பழம் சீசன் தொடக்கம்

கொடைக்கானலில் பேஷன் புரூட்ஸ் பழம் சீசன் தொடங்கியநிலையில் அமோக விளைச்சல் இருப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வாழை, ஆரஞ்சு, பலா,கொய்யா, சீதா, மு... மேலும் பார்க்க

கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கும்பல் கைது

நிலக்கோட்டை பகுதியில் நள்ளிரவில் ஆயுதங்களுடன் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கும்பலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை இ.பி.குடியிருப்பு, நாகல்நகா் உள்ளிட்ட பல்வேறு... மேலும் பார்க்க

வேளாண் பயிா்களுக்கு காப்பீடு செய்யலாம்

பிரதமரின் காப்பீடுத் திட்டத்தின் கீழ் நெல், மக்காச்சோளம், சோளம், நிலக்கடலை, பருத்தி பயிா்களுக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி ... மேலும் பார்க்க

திராவிடம் குறித்து அவதூறு: கட்டாய விடுப்பில் சுகாதார ஆய்வாளா்

திராவிடம் குறித்தும், திமுக குறித்தும் மாணவா்களிடையே அவதூறு கருத்துகளைப் பரப்பியதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், காந்தி கிராம கிராமியப் பல்கலை. சுகாதார ஆய்வாளா் கட்டாய விடுப்பில் திங்கள்கிழமை அனுப்பப... மேலும் பார்க்க

அடிப்படை வசதி கோரி பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மனு

திண்டுக்கல் அருகே தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி கோரி பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளிகள... மேலும் பார்க்க