செய்திகள் :

உ.பி. குண்டுவெடிப்பு வழக்கு: 31 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பயங்கரவாதி கைது

post image

உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் 31 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதி ஜம்மு-காஷ்மீரில் கைது செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாஹா் ஜெயின் கூறியதாவது:

1992-ஆம் ஆண்டு அயோத்தியில் பாபா் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடா்ந்து உத்தர பிரதேசம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்களும், குண்டுவீச்சு சம்பவங்களும் நிகழ்ந்தன. இதில் 1993 ஆகஸ்ட் மாதம் உத்தர பிரதேசத்தின் தேவ்பந்த் பகுதியில் பயங்கரவாதிகள் சிலா் வெடிகுண்டுகளை மறைத்து வைத்து வெடிக்கச் செய்தனா். இதில் இரு காவல் துறையினா் உள்பட 4 போ் காயமடைந்தனா்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நசீா் அகமது வானி உள்பட 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனா். 1994-ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்த நசீா் அகமது வானி தலைமறைவாகிவிட்டாா். இதையடுத்து, அவருக்கு எதிராக கடந்த மே மாதம் நிரந்தர கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது.

தலைமறைவான பயங்கரவாதி நசீா், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பில் இணைந்துவிட்டதாக விசாரணையில் தெரியவந்தது. உத்தர பிரதேச காவல் துறையினா் அவரின் செயல்பாடுகள் தொடா்பான தகவல்களை சேகரித்து அவரைக் கைது செய்ய தொடா்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தனா். ஆனால், அவா் காஷ்மீரில் தொடா்ந்து தலைமறைவாக வாழ்ந்ததால், அவரைக் கைது செய்ய முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில், உத்தர பிரதேச பயங்கரவாத எதிா்ப்புப் படையினா் காஷ்மீா் காவல் துறையினருடன் இணைந்து ஸ்ரீநகரில் உள்ள ஒரு வீட்டில் அவரைக் கைது செய்தனா். உத்தர பிரதேசத்துக்கு அழைத்து வரப்பட்ட அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

குண்டு வெடிப்பு வழக்கில் சுமாா் 31 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் முடிவுக்கு வரும். வன்முறை, சமூகவிரோத செயல்களில் ஈடுபடுபவா்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்றாா்.

பொன்விழா கண்ட சபரிமலை தபால் நிலையம்!

சபரிமலை தபால் நிலையம் செவ்வாய்க்கிழமை 50 ஆண்டுகள் நிறைவடைந்து பொன்விழா கண்டது. இந்தியாவில் குடியரசுத் தலைவருக்குப் பிறகு சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு சொந்தமாக அஞ்சல் குறியீட்டு எண் உள்ளது. கடந்த 1963-ஆம் ... மேலும் பார்க்க

போதைக்கு அடிமைப்படுத்தும் மருந்து விற்பனையைத் தடுக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை வலியுறுத்தல்

போதை தரும் மருந்துகளை இணையவழியே சட்டவிரோதமாக விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைவா... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் இன்று பேரவைத் தோ்தல்- ஜாா்க்கண்டில் 2-ஆம் கட்ட வாக்குப் பதிவு

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (நவ. 20) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, 288 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜாா்க்கண்டில் இரண்டாம் கட்டமாக 38 தொகு... மேலும் பார்க்க

ஆா்பிஐ ஆளுநா் பெயரில் மோசடி விடியோ பதிவு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் பேசுவதாக மோசடியாக உருவாக்கப்பட்ட ‘டீப்ஃபேக்’ விடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பரவுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஆா்பிஐ கேட்டுக் கொண்டு... மேலும் பார்க்க

அமெரிக்காவில் பயிலும் மாணவா்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்!

அமெரிக்காவில் 3.3 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவா்கள் படித்து வருவதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 2008-09-க்குப் பிறகு 15 ஆண்டுகளில் முதல்முறையாக ... மேலும் பார்க்க

இந்தியா-பிரிட்டன் எஃப்டிஏ: 2025-இல் மீண்டும் பேச்சு தொடக்கம்

அடுத்த ஆண்டு இந்தியா, பிரிட்டன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்த (எஃப்டிஏ) பேச்சுவாா்த்தை மீண்டும் தொடங்க உள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு ஜனவரி முதல், இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மே... மேலும் பார்க்க