செய்திகள் :

`எனக்கு அப்பாவும் இல்லை, இப்போது அம்மாவும்...' - 4 நாள்கள் வீட்டுக்குள் சடலமாக கிடந்த தாய், மகன்!

post image

தஞ்சாவூர், முனிசிபல் காலனியைச் சேர்ந்தவர் ஈஸ்வரி (59). இவரது மகன் ராகுல் (29), இவர் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு, சொந்தமாக தொழில் செய்து வந்தார். 17 வருடங்களுக்கு முன்பு ஈஸ்வரியின் கணவர் இறந்து விட்டார். சிறுவனாக இருந்த ராகுலை அவரது அம்மா ஈஸ்வரி தான் வளர்த்து ஆளாக்கியிருக்கிறார். அம்மாவும், மகனும் தனியாக வசித்து வந்துள்ளனர். கடந்த நான்கு நாள்களாக ஈஸ்வரியின் வீடு பூட்டியே கிடந்துள்ளது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இருவரும் வெளியூருக்கு சென்று விட்டதாக நினைத்துள்ளனர்.

ஈஸ்வரி- ராகுல்

இந்த நிலையில் இன்று ஈஸ்வரி வீடு அமைந்துள்ள பகுதியில் தூய்மைப் பணிகள் செய்வதற்கு துாய்மைப் பணியாளர் ஒருவர் வந்துள்ளார். அப்போது, ஈஸ்வரி வீட்டுக்குள் இருந்து துர்நாற்றும் வீசுவதாக அக்கம் பக்கத்தினரிடம் சொல்லியுள்ளார். இது குறித்து ராகுலின் நண்பர் ஒருவருக்கும் தகவல் சொல்லப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த ராகுலின் நண்பர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளார். அதன் பின்னர் அங்கு வந்த போலீஸார், உள்பக்கமாக கதவு பூட்டப்பட்டு இருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு கழிவறையில் ஈஸ்வரி இறந்த நிலையிலும், அறையில் ராகுல் துாக்கில் தொங்கிய நிலையிலும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இருவரது உடல்களை மீட்ட போலீஸார், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, தடயவியல் நிபுணர்கள் வீடு முழுவதும் ஆய்வு செய்தனர். இதில் வேறு யாரும் வீட்டுக்கு வந்து செல்லவில்லை என்பதை போலீஸார் உறுதி செய்தனர். அப்போது, ராகுல் எழுதிய கடிதம் ஒன்று போலீஸாருக்கு கிடைத்தது. அந்த கடிதத்தை ராகுல் 15ம் தேதி எழுதியதாக தெரிகிறது.

அதில், `நண்பர்களை பார்க்க வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்தேன். அம்மா, கழிவறையில் இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நான் அம்மானு கதறினேன். எனக்கு அப்பாவும் இல்லை, இப்போது அம்மாவும் என்னை தவிக்க விட்டு போயிட்டார். நான் மட்டும் தனியாக அம்மா இல்லாமல் எப்படி வாழ்வது, நானும் இந்த உலகத்தை விட்டு அம்மாவுடன் போகிறேன்' என எழுதியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் ராகுல் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தஞ்சாவூரில் சோகத்தை ஏற்படுத்தியது.

லாஃப்ரா யாழினி ஐபிஎஸ் –அத்தியாயம் 1 | தொடர்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

வெடிச் சத்தமும் வீங்கிய முதுகும் - அமெரிக்க வாழ் தமிழரின் தீபாவளி நினைவுகள் | My Vikatan

பால்ய காலத்தில், பள்ளிப் பருவத்தில் தீபாவளி என்றாலே மனது குதூகலிக்கும் ஒரு நிகழ்வு. தீபாவளி என்பது தமிழர் கொண்டாடும் விழாவா? அது தேவையா? என்ற கேள்விகளெல்லாம் மனதுக்குள் தோன்றாத ஒரு காலம். எங்கள் கிராம... மேலும் பார்க்க

`ப்ளீஸ்.. குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்களேன்!' - 90ஸ் கிட்ஸ் வேண்டுகோள் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

சிவகாமியின் சபதமும் ராமாயணமும் - 60ஸ் பெண்ணின் பாட்காஸ்ட் அனுபவம் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

சாலையோர வியாபாரியின் பார்வையில் `அன்பே சிவம்’ ! | My Vikatan

நான் ஒரு சாலையோரக் கடை வியாபாரி. சாலையில் கடை வைத்திருப்பதால், அந்த சாலையில் நிகழும் சிறு சிறு விபத்துகளின் போது முதலுதவி செய்து, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது வழக்கமாகிவிட்டது. விபத... மேலும் பார்க்க