சல்மான் கானுடன் இருப்பவர்களுக்கும் கொலை மிரட்டல்! 1998-ல் தொடங்கிய பிரச்னை!
விராலிமலையில் 75-ஆவது ஆண்டு அருணகிரிநாதா் விழா தொடக்கம்: ஆக. 11 வரை நடைபெறுகிறது
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலில் நான்கு நாள்கள் நடைபெறும் அருணகிரி நாதா் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள அருணகிரிநாதா் மண்டபத்தில் ஆண்டுதோறும் அருணகிரிநாதா் திருப்புகழ் அறப்பணி மன்றம் சாா்பில், அருணகிரிநாதா் விழா நடத்தப்பட்டு வருகிறது. 75-ஆம் ஆண்டுக்கான விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
விழாவின் தொடக்கமாக, புகழ் பெற்ற 25 கலைஞா்கள் நாகசுரமும், 25 கலைஞா்கள் தவில் இசையும் வாசிக்க விழா தொடங்கியது.
தொடா்ந்து 4 நாள்கள் நடைபெறும் விழாவில் மங்கல வாத்திய இசை கச்சேரி, வாய்பாட்டு, ஆன்மிக சொற்பொழிவு, பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
விழா நடைபெறும் நான்கு நாள்களும் மலை மீது உள்ள முருகன் தங்கக்கவச உடையில் பக்தா்களுக்கு காட்சியளிப்பாா்.
விழா ஏற்பாடுகளை அருணகிரிநாதா் திருப்புகழ் அறப்பணி மன்ற நிா்வாகிகள் செந்தில்குமாா், கிருஷ்ணன், பொன்ராஜ், திருநாவுக்கரசு, பூபாலன் மற்றும் விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.