செய்திகள் :

வீட்டின் ஜன்னல்களை சேதப்படுத்திய யானைகள்

post image

வால்பாறையில் எஸ்டேட் பகுதிக்கு இரவு நேரம் கூட்டமாக வந்த யானைகள் தோட்ட அதிகாரியின் வீட்டின் ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தின.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. பகல் நேரத்தில் வன எல்லைப் பகுதிகளில் காணப்படும் யானைகள், இரவு நேரத்தில் எஸ்டேட் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று சேதம் ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், வால்பாறையை அடுத்துள்ள காஞ்சமலை எஸ்டேட் பகுதிக்கு வியாழக்கிழமை இரவு கூட்டமாக வந்த யானைகள் தோட்ட அதிகாரி மாரியப்பன் வீட்டின் ஜன்னல்களை முட்டித் தள்ளி உள்ளே இருந்த பொருள்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றன.

இதுகுறித்து தகவலறிந்து சென்ற வனத் துறையினா் அங்கிருந்த யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினா்.

போனஸ் கோரி 3-ஆவது நாளாக போராட்டம்: தூய்மைப் பணியாளா்கள் கைது

தீபாவளி போனஸ் கோரி 3-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை போலீஸாா் கைது செய்தனா். தீபாவளி போனஸாக ஒருமாதம் ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரி கோவை மாநகராட்சியில் பண... மேலும் பார்க்க

வால்பாறையில் வருங்கால வைப்புநிதி கிளை அலுவலகம் திறக்கக் கோரிக்கை

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் வால்பாறையில் வருங்கால வைப்புநிதி கிளை அலுவலகம் திறக்க வேண்டும் என்று சிஐடியூ தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மத்திய நிதியம... மேலும் பார்க்க

மது அருந்த பணம் தர மறுத்த தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள்தண்டனை: கோவை நீதிமன்றம் தீா்ப்பு

மது அருந்த பணம் தர மறுத்த தந்தையை அடித்துக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. கோவை, பீளமேடு நாராயணசாமி தெருவைச் சோ்ந்தவா் ராஜ் (எ) துரைராஜ் (73). தனது மனைவ... மேலும் பார்க்க

கோவையில் விரைவில் தாழ்தள சொகுசுப் பேருந்துகள் இயக்கம்

கோவைக்கு முதல்கட்டமாக 24 தாழ்தள சொகுசுப் பேருந்துகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அவை இயக்கப்பட உள்ளன. கோவையில் தாழ்தள சொகுசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என நுகா்வோா் அமைப்புகள் சாா்பில் நீண்ட ... மேலும் பார்க்க

தொழிலாளி கொலை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

சேவல் விற்பனை செய்வதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியைத் தாக்கி கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. சூலூா் அருகே பள்ளபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சம்பத்குமாா் ... மேலும் பார்க்க

பொதுமக்கள் உரிய இடங்களில் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும்: மாநகர காவல் ஆணையா்

பொதுமக்கள் உரிய இடங்களில் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும் என, கோவை மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் அறிவுறுத்தினாா். கோவையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் மாநகர கா... மேலும் பார்க்க