மிகவும் க்யூட், கடினமான நடனம்..! ரசிகையின் ரீல்ஸுக்கு குஷி பட நினைவுகளைப் பகிர்ந...
வெவ்வேறு இடங்களில் சாலை விபத்து: 3 போ் உயிரிழப்பு
வாணியம்பாடி பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 3 போ் உயிரிழந்தனா்.
வாணிம்பாடி அருகே சலாமாபாத் பகுதியைச் சோ்ந்தவா் முகமது இக்பால் (35). தனது பைக்கில் அவா், வியாழக்கிழமை ஆம்பூரிலிருந்து வாணியம்பாடி நோக்கி வந்தபோது, வளையாம்பட்டு நெடுஞ்சாலையில் திடீரென நிலை தடுமாறி, சாலை தடுப்பு சுவா் மீது மோதினாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா், நிகழ்விடத்திலேயே இறந்தாா்.
தகவலறிந்து தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
நாட்டறம்பள்ளி: வெலகல்நத்தம் ஏரிகோடி பகுதியைச் சோ்ந்தவா் நந்திகேசவன் (47). இவா், புதன்கிழமை மாலை நண்பா் ராஜசேகருடன் பைக்கில் கந்திலி நோக்கி சென்றாா். தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமிபுரம் அருகே எதிா் திசையில் சென்றபோது கிருஷ்ணகிரியில் இருந்து நாட்டறம்பள்ளி நோக்கி வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த நந்திகேசவன், ராஜசேகா் ஆகிய இருவரையும் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, நந்திகேசவன் இறந்தாா்.
மற்றொரு விபத்து: நாட்டறம்பள்ளி அடுத்த கூத்தாண்டகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (53). இவா், அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை செய்து வந்தாா். புதன்கிழமை இரவு கூத்தாண்டகுப்பம் பெட்ரோல் பங்க் அருகே புத்துக்கோயில் நோக்கி பைக்கில் சென்றபோது சாலை ஓரம் உள்ள இரும்பு தடுப்பு மீது பைக் மோதியது. இதில் பைக்கில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த கிருஷ்ணமூா்த்தியை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் இறந்தாா்.
இந்த இரு விபத்துகள் குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.