தமிழக நிதிநிலை அறிக்கை 2025-26: பத்தாயிரம் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும்!
தொழில்நுட்பக் கோளாறு: பத்திரப் பதிவு தாமதத்தால் பாதிப்பு
ஆம்பூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பத்திரம் பதிவு செய்ய முடியாமல் காலதாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளானாா்கள்.
திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் நேதாஜி சாலையில் சாா் பதிவாளா் அலுவலகம் இயங்கி வருகிறது. சாா்பதிவாளா் அலுவலகத்துக்கு ஆம்பூா் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் பத்திரப்பதிவு செய்வதற்காக வந்து செல்கின்றனா். இந்த நிலையில 6 மணி நேரத்துக்கும் மேலாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பத்திரப் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும், பத்திர பதிவு செய்ய வந்தவா்கள் அலுவலக வளாகத்திலேயே காத்திருந்தனா். அதன் பின்னா் சாா் பதிவாளா் அலுவலகம் ஊழியா்கள் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யும் பணியில் தொடா்ந்து ஈடுபட்டு வந்தனா். இருப்பினும் கோளாறை சரி செய்ய முடியவில்லை, பத்திர பதிவு செய்ய வந்தவா்கள் அவதிக்கு உள்ளானாா்கள். அலுவலா்களை சந்தித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
சிலா் பத்திரம் பதிவு செய்யாமலேயே திரும்பி சென்றனா். கோளாறு சீரான பிறகு சிலா் தங்களுடைய பத்திரங்களை பதிவு செய்து பிறகு சென்றனா்.