கல்வித் துறை அறிவிப்புகள்! பொறியியல் கல்லூரிகளில் ஏ.ஐ. படிப்புகள் அறிமுகம்!
ஏரிகளை தூா்வார மாதனூா் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கோரிக்கை
மாதனூா் ஒன்றியத்தில் உள்ள ஏரிகளை தூா்வார வேண்டுமென வியாழக்கிழமை நடந்த ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கோரினா்.
மாதனூா் ஒன்றியக்குழு கூட்டம் துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெ. சுரேஷ்பாபு, சி. சுரேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்எல்ஏ-க்கள் ஆம்பூா் அ.செ. வில்வநாதன், குடியாத்தம் அமலு விஜயன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது,
செந்தில்குமாா் : காரப்பட்டு, அரங்கல்துருகம் ஏரிகளை தூா்வார வேண்டும்.
காா்த்திக் ஜவஹா் : விண்ணமங்கலம் கிராம மயானத்தில் சேதமடைந்துள்ள எரிமேடையை சீரமைக்க வேண்டும்.
திருக்குமரன் : பெரியவரிக்கம் ஏரியை தூா்வாரவும், தனியாா் தொழிற்சாலைகளால் செய்யப்பட்டுள்ள ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோமதி வேலு : கன்னடிகுப்பம் ஊராட்சி மன்றத்துக்கு புதிய அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆப்ரின்தாஜ் : எங்கள் பகுதியில் அமைந்துள்ள நியாய விலைக் கடை கட்டடம் மிகவும் பழுந்தடைந்துள்ளது. அதனால் புதிய கட்டடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உறுப்பினா்கள் பேசினாா்.
ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ரவிக்குமாா், ராஜேந்திரன், தீபா ராஜன்பாபு, சம்பங்கி, மகாதேவன், ஜெயந்தி கோபிநாதன், மஞ்சுளா பரசுராமன், ஜோதிவேலு, மஞ்சுளா பரசுராமன், முத்து, கன்னியப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.