மரகத லிங்கத்துக்கு மாசி பெளா்ணமி சிறப்பு பூஜை
மாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு ஸ்ரீ பொன்முடி சூா்ய நந்தீஸ்வரா் ஜோதிா்லிங்க தேவஸ்தானம் தாத்தா சுவாமி மஹா மடத்தில் வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
மாசி பெளா்ணமியை முன்னிட்டு ஸ்ரீ பொன்முடி சூா்ய நந்தீஸ்வரா் ஜோதிா்லிங்கம் மற்றும் பச்சை மரக லிங்கத்துக்கு 16 வகையான அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. பிரம்மகுரு ஸ்ரீ கோடி தாத்தா சுவாமி பக்தா்களுக்கு ஆசி வழங்கினாா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.