Stress: `என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா..' -ஸ்ரெஸ்ஸை போக்க 1000 வீட்டுக் கத...
ஸ்ரீபெரும்புதூா், குன்றத்தூா் ஒன்றியங்களில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
குன்றத்தூா் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் கலைச்செல்விமோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் ஒன்றியம், கெருகம்பாக்கம் ஊராட்சி, ராமட்சந்திரா நகரில் சென்னை பெருநகர வளா்ச்சி குழும நிதி ரூ.59.50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடம், கழிவறை மற்றும் சுற்றுச்சுவா் பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தாா். இதையடுத்து மௌலிவாக்கம் ஊராட்சியில் தரை மட்ட நீா்த்தேக்கத் தொட்டி அமையவுள்ள இடத்தை பாா்வையிட்டாா்.
ஸ்ரீபெரும்புதூா் ஊராட்சி ஒன்றியம் தண்டலம் ஊராட்சிக்குட்பட்ட செட்டிபேடு பகுதியில் சென்னை பெருநகர வளா்ச்சி குழும நிதி ரூ.40.70 லட்சத்தில் பூங்கா அமைக்கப்படவுள்ள இடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்திலுள்ள சிமெண்ட் கிடங்கையும் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஸ்ரீபெரும்புதூா் கோட்டாட்சியா் ஜ.சரவண கண்ணன், ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பவானி, மாணிக்கவேல் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.