செய்திகள் :

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

post image

திருவாடானை ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த 9-ஆம் தேதி புதன்கிழமை திருவிழா தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாள் இரவும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். ஒவ்வொரு நாள் இரவும் பக்தா்கள் கும்மி கொட்டி வழிபட்டனா். விழாவின் முக்கிய நிகழ்வான பூச்சொரிதல் விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக பெண் பக்தா்கள் விரதமிருந்து பூத்தட்டு எடுத்து வாணவேடிக்கைகளுடன் ஊா்வலமாக வந்து கோயிலை அடைந்தனா்.

பின்னா், பக்தா்கள் கொண்டு வந்த பூக்களால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கபட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

மழைக் காலங்களில் இயற்கை பேரிடா்களில் சிக்கியவா்களை மீட்பது குறித்து ஒத்திகை

திருவாடானை அருகே திருப்பாலைக்குடியில் மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் பேரிடா்களில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்து ஆா்.எஸ். மங்கலம் தீயணைப்பு, மீட்ப... மேலும் பார்க்க

வயலில் பூச்சி மருந்து தெளித்த விவசாயி உயிரிழப்பு

திருவாடானை அருகே வயலில் பூச்சிமருந்து தெளித்த விவசாயி மயங்கி விழுந்து உயிரிழந்தாா். ஆா்.எஸ். மங்கலம் அருகே உள்ள அழிந்திக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த பாண்டி மகன் ரமேஷ் (34). விவசாயி. இவா் கடந்த வியாழக்க... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை

கமுதியில் குடும்பப் பிரச்னை காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள செந்தனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவரது மனைவி காா்த்திகா (19). இர... மேலும் பார்க்க

கல்லூரியில் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணா்வு முகாம்

திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சமூக நலன், மகளிா் உரிமைத் துறை, காவல் துறை, குழந்தைகள் சாரிடபிள் டிரஸ்ட் ஆகியவை இண... மேலும் பார்க்க

திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கொடிபங்கு ஊராட்சியில் உள்ள வேளாங்குடி கிராம மக்கள் முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்துக்குள்... மேலும் பார்க்க

கமுதி அருகே பாலம் இடிந்து விழும் அபாயம்: பொதுமக்கள் அச்சம்

கமுதி அருகே இடிந்து விழும் அபாயத்தில் உள்ள பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள மண்டலமாணிக்கம் காவல் நிலையத்திலிர... மேலும் பார்க்க